அமெரிக்காவுடன் சீனா மறைமுக போர்?.. சீனா பெயரில் மர்ம விதைகள்.!! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸின் தாக்கம் துவக்கத்தில் சீனா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளை சிதைத்தது. சீனா கொரோனா வைரஸின் பிடியில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறது. சீனாவின் மீது அமெரிக்கா கொரோனா விவகாரத்தில் கடும் கோபத்தில் இருக்கிறது. 

இந்த நிலையில், அமெரிக்காவில் சிலருக்கு பார்சல் மூலமாக சீனாவில் இருந்து விதைகள் வந்து இருப்பதாகவும், இந்த விஷயம் குறித்து அமெரிக்க விவசாயத்துறை சந்தேகம் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த விஷயம் தொடர்பாக அமெரிக்கர்களுக்கு அமெரிக்க விவசாயத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவில் இருந்து வரும் பார்சலில் உள்ள விதைகளை பயிரிட வேண்டாம் என்றும், இது குறித்த பார்சல்களை உள்ளூர் விவசாயத்துறை அதிகாரிகளிடம் காண்பிக்குமாறும் கூறப்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்காவின் பொருளாதாரத்தை சீர்குலைக்க சீனாவின் உயிரி ஆயுதம் கைகளில் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இப்போது சீனாவில் இருந்து வரும் மர்ம விதைகள் பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைப்போன்ற பார்சல் கனடாவிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த விஷயத்தை ஏற்க மறுப்பு தெரிவித்த சீனா, அதில் இருக்கும் லேபிள்கள் போலியானவை என்றும், அந்த லேபிளில் உள்ள தகவல் போலியானது மற்றும் தவறானது என்று கூறியுள்ளனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

China sent Mystery seeds to America


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->