ஆஸ்திரேலியாவை அழிக்கவும் தயங்கமாட்டோம்.. சீன பத்திரிகை பரபரப்பு தகவல்..!! - Seithipunal
Seithipunal


கரோனா வைரஸின் தாக்கம் காரணமாக உலக நாடுகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி, ஆஸ்திரேலியா போன்ற உலக நாடுகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் சீனாவை கடுமையான அளவு விமர்சனம் செய்து வந்தன. இந்த விஷயத்தில் தற்போது ஆஸ்திரேலியாவும் சேர்ந்துள்ள நிலையில், சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்தியுள்ளது.

ஏற்கனவே சீனா இந்த விவகாரத்தில் உலகநாடுகள் மீது கடும் கோபத்தில் இருந்த நிலையில், ஆஸ்திரேலியாவின் மீதும் கோபமடைந்து உள்ளது. மேலும், இது குறித்து பேசிய குளோபல் டைம்ஸ் பத்திரிகை செய்தியாசிரியர், எங்களின் மீது அவதூறு கூறுவது தங்களின் நாட்டு உறவில் விரிசல் ஏற்படுத்தும் என்றும், இது ஆஸ்திரேலியாவிற்கு பெரும் அழிவை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார். 

மேலும், ஆஸ்திரேலியா தனது வர்த்தகத்தில் 26 விழுக்காடு சீனாவை சார்ந்துள்ள நிலையில், கடந்த 2018 ஆம் வருடம் முதல் 2019 ஆம் வருடம் வரை 235 பில்லியன் டார் மதிப்பில் உள்ள நிலக்கரி, இரும்பு தாது, ஒயின், மாட்டிறைச்சி போன்ற ஏற்றுமதிக்கு சீனா மிகப்பெரிய சந்தையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதுமட்டுமல்லாது சுற்றுலா மற்றும் மூன்றாம் நிலைக்கல்வி ஆஸ்திரேலிய வருமானத்திற்கு சீனா பெரும்பங்காக உள்ளது.

கரோனா வைரஸானது சீனாவின் யூகான் நகர மையப்பகுதியில் இருந்து பரவியது. இது உலகளவில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள காரணத்தால், சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியாவின் வர்த்தகம் இதன்பேச்சால் பாதிக்கும் என்றும், ஆஸ்திரேலியா விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், ஆஸ்திரேலியா தங்களின் கால்களில் இருக்கும் சுவிங்கம் போல, இதனை நீக்க பெரும் கல்லை பயன்படுத்தவும் தயங்கமாட்டோம் என்றும் எச்சரித்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

China Press editor speech about Australia statement about covid 19


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->