கொரோனா வைரஸ் தாக்கம்... உயர்ந்து கொண்டே போகும் பலி எண்ணிக்கை.. அச்சத்தில் மக்கள்..!  - Seithipunal
Seithipunal


சீன நாட்டில் உள்ள உஹான் பகுதியில் கரோனா என்ற புதியவகை வைரஸ் பரவியிருப்பது அண்மையில் கண்டறியப்பட்ட நிலையில், இந்த வைரஸின் காரணமாக பாதிக்கப்பட்ட நபர்கள் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனையடுத்து இந்த வைரஸ் தொடர்ந்து பரவிக்கொண்டு வருவதால், இந்த வைரசால் தற்போது வரை சுமார் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனைப்போன்று அங்குள்ள உஹான், பீஜிங், ஷாங்காய், ஸெனான், தியான்ஜின் மற்றும் ஜேஜியாங் போன்ற பகுதியிலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் தாக்கம் அமெரிக்கா, தைவான், ஜப்பான், தென்கொரியா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நான்கு நாடுகளுக்கும் பரவியுள்ளதாக தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸிலின் தாக்கத்தால் சுவாசக்கோளாறு பிரச்சனை ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகிறது. 

மேலும், கடந்த 22 ஆம் தேதி வரை சுமார் 7 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் தெரிவிக்கிப்பட்ட நிலையில், அடுத்தடுத்து மூன்று நாட்களிலில் மொத்தமாக கரோனோ வைரஸிற்கு இன்று காலை வரை சுமார் 41 பேர் பலியாகியுள்ளதாகவும், 1287 பேர் வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், இறந்த நபர்களில் வயதான நபர்களே அதிகம் என்பதையும் சீன அரசு தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் மக்களிடையே பரவியதற்கு பல காரணங்கள் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், இறுதியாக காட்டுவிலங்குகள் இறைச்சியில் இருந்து கோரோனோ வைரஸ் பரவியிருப்பது தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த வைரஸின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட நபர்களில் தற்போது வரை 2000 க்கு மேற்பட்டோர் பேர் பாதிக்கப்ட்டுள்ளதாகவும், சுமார் 56 பேர் இறந்துள்ளதாகவும் சீன அரசு அறிவித்திருந்தது. மேலும், பலியானோரில் பெரும்பாலானோர் வயதான நபர்களை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

china people scared for coronavirus attack


கருத்துக் கணிப்பு

சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைந்திருப்பது யாருக்கு லாபம்?



Advertisement

கருத்துக் கணிப்பு

சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைந்திருப்பது யாருக்கு லாபம்?




Seithipunal
--> -->