5 இந்திய சிறுவர்களை கடத்திய சீன இராணுவம்?.. காங்கிரஸ் எம்.எல்.ஏ பரபரப்பு குற்றச்சாட்டு.!! - Seithipunal
Seithipunal


சீன நாட்டின் மக்கள் விடுதலை இராணுவம், அருணாச்சல பிரதேசம் மாவட்டத்திலுள்ள சுபுன்சிரி நாச்சசோ கிராமத்தை சார்ந்த ஐந்து சிறுவர்களை கடத்தியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த விஷயம் தொடர்பாக கூறியுள்ள காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் நினோங் எரிங், " சீன நாட்டின் பி.எல்.ஏ என்று அழைக்கப்படும் மக்கள் விடுதலை இராணுவம், அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் உள்ள நாச்சோ அப்பர் சுபுன்சிரி பகுதியை சார்ந்த ஐந்து சிறுவர்களை கடத்தி சென்றுள்ளது. 

ரஷியா மற்றும் சீனாவின் பாதுகாப்பு அமைச்சர்கள், இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்திக்கையில் இது நடந்துள்ளது. சீன பி.எல்.ஏவின் இந்த நடவடிக்கை மிகவும் தவறானதாகும். ஆகஸ்ட் 29 ஆம் தேதி மற்றும் 30 ஆம் தேதியில் கிழக்கு லடாக்கில் இருக்கும் பாங்காங் தசோவின் தென்கரை பகுதியிலும் சீன இராணுவம் ஊடுருவ முயற்சி செய்தது. 

இதனை இந்திய இராணுவம் தடுத்து நிறுத்திய நிலையில், இந்தியாவிற்கும் - சீனாவிற்கும் இடையே பதற்றம் அதிகரித்து இருக்கிறது. சீனாவின் இந்த மோதல் போக்கு மற்றும் குழந்தைகள் கடத்தல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்துகிறது " என்று கூறியுள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

China Kidnapped 5 Indian child in Arunachal Pradesh


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->