இருதரப்பு பொதுவான முயற்சிகள் தேவை - சீனா.! - Seithipunal
Seithipunal


லடாக் எல்லையில் நடைபெற்ற மோதலை தொடர்ந்து இந்தியா - சீனா இடையே இருநாடுகளின் படை வீரர்கள் குவிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வரும் நிலையில், பேச்சுவார்த்தை மூலமாக சுமூக முடிவு காணும் செயலும் நடைபெற்று வருகிறது. 

இராணுவ அதிகாரிகள் மட்டத்திலான 8 பேச்சுவார்த்தைகள் தற்போது வரை நடைபெற்று முடிந்தாலும், முன்னேற்றம் காணப்படாமல் இருந்து வருகிறது. சமீபத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஆஸ்திரேலிய நிறுவனத்தின் இணையவழி கருத்தரங்கில் பங்கேற்ற சமயத்தில் லடாக் மோதல் தொடர்பாக பேசியிருந்தார். 

மேலும், எல்லைப்பகுதியில் சீனா தனது வீரர்களை களமிறக்கியதற்கு 5 மாறுபட்ட விளக்கங்களை வழங்கியுள்ளது என்றும், இருதரப்பு ஒப்பந்தத்தை சீனா மீறி செயல்பட்டு வந்ததன் முடிவில், இருநாட்டு உறவில் கணிசமான சேதம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

இந்த விஷயம் தொடர்பாக சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹுவா சுனியிங் தெரிவிக்கையில், " இந்தியா - சீனா உலகின் மிகப்பெரிய வளர்ந்து வரும் இரண்டாவது சந்தையாக இருக்கிறது. இருநாடுகளின் உறவுகளை பேணுவது, இரண்டு நாடுகளின் அடிப்படை நலன்கள் மற்றும் மக்களுக்கு நல்லது. பொதுவான முயற்சிகள் இருதரப்பு உறவுகளுக்கும் தேவை " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

China India Problem External Affair Ministry Secretary Speech


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->