ஆண்மையை பாதிக்கும் அடுத்த வைரஸ்.. பீதியை ஏற்படுத்தும் சீனா.. முதற்கட்டமாக 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு.! - Seithipunal
Seithipunal


சீனாவில் ஆண்மையை இழக்க செய்யும் புதிய வகை பாக்டீரியா தொற்றானது ஆயிரக்கணக்கான மக்களுக்கு பரவி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், உலகையே உலுக்கிய சீனாவின் கொரோனா வைரஸை தொடர்ந்து, தற்போது புரூசெல்லா என்ற பாக்டீரியா நோய்த் தொற்றும் பரவியுள்ளது. இந்த வைரஸ் கால்நடை தடுப்பூசி ஆய்வகத்தில் இருந்து கடந்த வருடத்தில் பரவியது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

சீனாவின் தலைநகரான பீஜிங் அருகேயுள்ள ஹான்சு மாகாணம் லாங்சவ் நகரம் இருக்கிறது. இந்த நகரில் உயிரியல் மருந்து நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆய்வகத்தில் கால்நடைகளை தாக்கி அளிக்கும் நோயினை தடுக்கும் வகையில், தடுப்பு மருந்து கண்டறியப்படும் முயற்சியில் ஈடுபட்டு இருந்த நிலையில், கடந்த வருடம் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் ஆலையில் வாயு கசிவு ஏற்பட்டு உள்ளது. 

இந்த வாயுக்கசிவிற்கு பின்னர் காற்று மூலமாக நோய்தொற்று பரவிய நிலையில், முதற்கட்டமாக அப்பகுதியை சுற்றி இருந்த 200 க்கும் மேற்பட்ட மக்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் பரவியுள்ளது. இவர்களில் 20 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்து ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து மொத்தமாக 3645 பேருக்கு நோய்தொற்று ஏற்பட்டதாக சுகாதாரத் துறை தகவல் தெரிவிக்கிறது. 

இது காற்று மற்றும் உடலில் ஏற்பட்டுள்ள திறந்த காயத்தின் மூலமாக எளிதில் பரவும் தன்மையை கொண்டது. கால்நடைகள் மற்றும் மனிதர்களை தாக்கும் புரூசெல்லா குளிர் காய்ச்சல், உடல் வலி, தலைவலி, பசியின்மை, எடை குறைதல் போன்ற பிரச்சினையை ஏற்படுத்தும். இது மரணத்தை ஏற்படுத்தாவிட்டாலும், மூளையில் அழற்சி ஏற்படும் என்றும், ஆண்மை குறைபாட்டை ஏற்படுத்தும் என்றும் விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே பரவியுள்ள கொரோனா வைரஸிற்கே தடுப்பூசி கிடைக்காமல் அல்லாடும் நிலையில், அடுத்தகட்டமாக ஆண்மையை பாதிக்கும் நோய் சீனாவில் பரவ துவங்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை விஞ்ஞானிகளிடையே ஏற்படுத்தியுள்ளது. சீனாவை அமெரிக்கா துவக்கத்தில் இருந்து குற்றம் சுமத்தி வருவது சரியே என்பதை மீண்டும் அது தெளிவுபடுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

China Impotence problem virus Brucella Out Break


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->