பேரீச்சம்பழத்திற்கு போகும் இராணுவ தளவாடம்.. நட்பு நாடுகளுக்கு ஆப்படித்த சீனா.. ச.மூவின் சல்லித்தனங்கள் அம்பலம்.! - Seithipunal
Seithipunal


காலாவதியான பழைய ஆயுதங்களை மியான்மர் மற்றும் வங்கதேசம், பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு சீனா வழங்கிய ஏமாற்றுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த 1970 ஆம் வருடம் முதல் பயன்படுத்தி வந்த பழைய மிக ரகத்தை சார்ந்த 035 G நீர்மூழ்கி கப்பலை வங்கதேசத்திற்கு சீனா வழங்கியது. ஒவ்வொன்றையும் தலா 100 மில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கிய வங்கதேசம், அதற்கு பி.என்.எஸ் நபோசத்ரா, ஜோய்சத்ரா என்று புதிய பெயரையும் சூட்டி தனது கடற்படையில் இணைத்துக் கொண்டது. 

ஆனால் வங்கதேசத்தில் மகிழ்ச்சி இரண்டு வருடங்கள் கூட முழுமையாக முடிக்காத நிலையில், சீனா கொடுத்த இரண்டு நீர்மூழ்கி கப்பல்களும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இயக்க முடியாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சீனாவிடம் மீண்டும் பொருட்களை வாங்காமல் இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், வங்கதேசம் 2020 ஆம் ஆண்டு 2 போர்க்கப்பல்களை வாங்கியது. இதனை மீண்டும் தனது கடற்படையில் இணைத்துக் கொண்ட நிலையில், வாங்கிய ஆறு மாதங்களிலேயே ரேடார் இயங்காமல் கோளாறு ஏற்பட்டுள்ளது. 

மேலும், கப்பலில் பொருத்தப்பட்டுள்ள துப்பாக்கி தொழில்நுட்பம் சேதம் ஆகியுள்ளது. இதனைப்போன்று நேபாளம் வாங்கிய சீன தயாரிப்பான Y 12 மற்றும் எம்.ஏ 60 ரக விமானங்கள் 6 பறக்க முடியாமல் காட்சிப்பொருள் போல நின்றுகொண்டு இருக்கிறது. மியான்மரும் இதனைப்போன்றே பிரச்சனையை சந்தித்தால், இந்தியாவிடமிருந்து இராணுவ பொருட்களை வாங்க மியான்மர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 

சீனா தனது நட்பு நாடாக நெருங்கிய கூட்டாளியாக வைத்திருக்கும் பாகிஸ்தான் நாட்டிற்கும் இதனைப்போன்ற பொருளை வழங்கி ஏமாற்றியுள்ளது. எப். 22 பி ரக போர்க்கப்பலை பழுது பார்த்து பாகிஸ்தான் நாட்டிற்கு வழங்கிய நிலையில், அதிலும் பல கோளாறுகளால் இயக்கமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், LY 80 LOMODAS ரக ஏவுகணையும் பாகிஸ்தானிற்கு விநியோகம் செய்யப்பட்டு பலனில்லாமல் போயுள்ளது.  

சீனாவின் இதுபோன்ற காலாவதியான ஆயுதங்கள் ஆப்பிரிக்கா நாட்டிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது போன்ற வீணாப்போன ஆயுதங்கள் சோதனை ஓட்டத்திலேயே தவறான முடிவுகளை அளித்ததால், சீனா அதனை பிற நாடுகளுக்கு நட்புறவை பாராட்டி பணம் சம்பாரித்து வந்துள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும், கென்யாவிலும் கவச வாகனங்கள் வழங்குகிறோம் என்ற பெயரில், சோதனை ஓட்டத்தின் போது கென்யாவில் வைத்து சீன அதிகாரிகள் வாகனத்தில் ஏறாமல் இருக்க, கென்ய இராணுவத்தினர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். 

சீன பொருட்களில் மின்னணு பொருட்கள் தான் போலியானவை என்றால், இராணுவ தளவாடங்களில் செய்துள்ள துரோகம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நட்புறவை பாராட்டி பணத்தினை வசூல் செய்து அல்லது அந்நாட்டில் தனது கொடியை பறக்கவிட சீன முயற்சி செய்துள்ள பல நடவடிக்கைகள் தற்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

China Damaged Army Materials Supply Allied nations


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->