சீனா கொரோனா தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி.!! - Seithipunal
Seithipunal


சீனா தயாரித்துள்ள புதிய கொரோனா தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்துள்ளது. சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரேசிலில் தன் கோரத்தாண்டவத்தை காட்டி வருகிறது. அனைத்து நாடுகளும் தடுப்பூசி மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சீனா தடுப்பூசியின் பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் தரம் ஆகியவற்றுக்கான உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரத்தை பெறும் ஆறாவது தடுப்பூசி என்று ஐநா சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்தார். 

பைஸர், மாடர்னா, ஸ்புட்னிக், கோவாக்சின், அஸ்ட்ராஜெனகா ஆகிய தடுப்பூசிகளை ஏற்கனவே உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்துள்ளது. சினோபார்ம் தடுப்பூசியானது இலங்கை, அமீரகம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றது. இதற்காக ஏற்கனவே சீனாவிலிருந்து அந்நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சீன தயாரித்துள்ள மற்றோரு தடுப்பூசியான சினோவாக்-கிற்கும் உலக சுகாதார நிறுவனம் ஓரிரு நாளில் ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

china corona vaccine


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->