எல்லாமே நீங்கதான்.. இந்தியா மீது பரபரப்பு குற்றசாட்டு.!! - Seithipunal
Seithipunal


இந்திய - சீன எல்லைப்பகுதியில் உள்ள லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன இராணுவ வீரர்களின் மோதலில், இந்திய இராணுவ தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து அதிகாரபூர்வ தகவல் வெளியாகாத நிலையில், சீன தரப்பிலும் இறப்புகள் மறைமுகமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனால் இந்தியா - சீனாவிற்கு இடையே போர் சூழல் உருவான நிலையில், செய்தியாளர்களை சந்தித்த சீன வெளியுறவுத்துறை தொடர்பாளர் லீ ஜியான் தனது அறிக்கையில், கல்வான் பள்ளத்தாக்கு கட்டுப்பாடு கோட்டில் இருக்கும் சீன பக்கத்தில் அமைந்துள்ளது என்றும், அங்கு பல வருடமாக சீன படையினர் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும் கூறினார்.

மேலும், கடந்த ஏப்ரல் மாதம் துவக்கத்திலேயே இந்திய வீரர்கள் கல்வான் பள்ளத்தாக்கில் சாலைகள் மற்றும் பிற கட்டமைப்புகளை செய்து வருகையில், சீனா எதிர்ப்பு தெரிவித்தது. இதனை இந்தியா பொருட்படுத்தாமல் இருந்த சூழலில், கடந்த மே 6 ஆம் தேதி இந்திய படைகள் எல்லையில் அத்துமீறி நுழைந்தது.

இதனை தணிக்க இந்திய - சீன இராணுவத்திடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. சீனாவின் உரிமைகோரால் மூலமாக இந்திய வீரர்கள் திரும்ப செல்ல சம்மதம் தெரிவித்து, அமைத்திருந்த தடுப்புகளை அழித்துவிட்டு சென்றனர். பின்னர் ஜூன் 6 ஆம் தேதி இராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடந்த நிலையில், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முடிவு எட்டப்பட்டது. மேலும், கல்வான் ஆற்றை கடந்து கண்காணிப்பு பணியில் இந்தியா ஈடுபடாது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த சூழ்நிலைக்கு உள்ளாகவே ஜூன் 15 ஆம் தேதி இந்திய இராணுவத்தின் அத்துமீறலால் சீன இராணுவத்தினர் சில நடவடிக்கை எடுக்க தள்ளப்பட்டுள்ளனர். இந்திய இராணுவத்தின் இந்த நடவடிக்கை பெரும் அதிர்ச்சியை அளித்தது. இரண்டு நாடுகளின் ஒப்பந்தத்தை மீறி சீன வீரரின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கான எதிர்ப்பையும் சீனா தெரிவித்துள்ளது.

பின்னர் இரண்டு நாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகள் அலைபேசி மூலமாக தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண பேசிய நிலையில், முன்கள வீரர்களை இந்தியா ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் சீன மந்திரி கோரிக்கை வைத்தார். களநிலை தொடர்பாக மற்றொரு பேச்சுவார்த்தை விரைவில் நடத்தப்படும் என்றும், சீனாவுடன் - இந்தியா இணைந்தே இயங்கும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

China complaint raise to India about Galwan Valley sector fight


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->