பிரம்மபுத்திரா குறுக்கே அணை கெட்ட தயாரான சீனா... இந்தியாவிற்கு பெரும் இடியை தந்த அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


மத்திய சீனாவின் தன்னாட்சி பிரேதேசமாக இருந்து வரும் திபெத்தின் மோசோ மாவட்டத்தில் இருக்கும் பள்ளத்தாக்கில், சீனா பிரமாண்டமான அணையினை கட்ட முடிவு செய்துள்ளது. மேலும், உலகிலேயே மிகவும் நீளமான மற்றும் ஆழமான பள்ளத்தாக்கில் இந்த அணை கட்டப்பட இருக்கிறது. 

கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4 ஆயிரத்து 900 அடி உயரத்தில் இருக்கும் பகுதியில் அணையை கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இந்த அணையில் சேமிக்கும் நீரினை கொண்டு 30 ஆயிரம் கிலோவாட் மின்சாரம் தயார் செய்யவும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

14 ஆவது ஐந்தாண்டு திட்டத்தில் இதனையும் இணைத்துள்ள சீனா, இந்த கட்டுமான பணிக்கு தனது பாராளுமன்றத்தில் ஒப்புதலையும் வழங்கியுள்ளது. இவ்வருடத்தின் இறுதியில் அணையின் கட்டுமான பணிகள் அனைத்தும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீர்மின் நிலையத்தை அமைக்கும் புகழ்பெற்ற நிறுவனத்துடன் சீனா ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், இந்த அணையால் சுற்றுசூழல் பாதிப்படைந்து, மலைவாழ் பழங்குடியின மக்கள் விரட்டப்படும் சூழ்நிலை ஏற்படலாம் என சமூக ஆர்வலர்கள் வருத்தமும் தெரிவிக்கின்றனர். மேலும், சீன தொழிலாளர்கள் திபெத் பகுதியில் நிரந்தரமாக குடியேறும் அபாயமும் இருக்கிறது.

இந்த அணையை சீனா கட்டினால் இந்தியாவிற்கு பல ஆபத்துகள் ஏற்படும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கையும் விடுகின்றனர். இமயமலை பகுதியில் பிரம்மபுத்திரா நதியானது திபெத்தில் உற்பத்தியாகி இந்தியா மற்றும் வங்காளதேசம் வழியாக செல்கிறது. இது ஆசிய கண்டத்தின் வற்றாத ஜீவா நதிகளில் ஒன்றாகும். இந்நதியின் குறுக்கே சீனா பிரம்மாண்ட அணையை காட்டுகிறது. 

இதனால், இந்தியாவிற்குள் வரும் பிரம்மபுத்திரா நதிக்கான நீரோட்டத்தினை சீன தடுக்கும். இது இந்தியாவிற்கு பெரும் இழப்பாக அமையும். இதனால் இந்தியாவும் பிரம்மபுத்திரா நதியில் இந்திய பகுதியில் அணையை கட்ட யோசனை செய்து வருவதாக தகவல் தெரியவருகிறது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். பாதுகாப்பாக இருங்கள்.. 

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், உடலுக்கு குளிர்ச்சியான உணவுகளை, இயற்கையான பழச்சாறுகளை எடுத்துக்கொள்ளுங்கள். உடல்நலத்தை பாதுகாத்திடுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

China Biggest Plan to Complete Tibet Area Brahmaputra River Dam 13 April 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->