செயற்கை சூரியனை உருவாக்கிய சீனா...! - Seithipunal
Seithipunal


சீனாவில் உள்ள செங்கிடூவில் (Chengdu) செயற்கை நிலவை உருவாக்கும் முயற்சி நடைபெற்று வந்த நிலையில், செயற்கை சூரியன் என்று அழைக்கப்படும் அணுக்கரு இணைவு உலையை வெற்றிகரமாக சீனா இயக்கி உள்ளது. இந்த செயற்கை சூரியனிடமிருந்து வெளிப்படும் வெப்பம், சூரியனின் வெப்பத்தை விட 10 மடங்கு அதிகம் என்பதும் குறிப்பிடதக்கது. 

தற்போது நடைமுறையில் உள்ள அணுக்கரு பிளவு முறையில் அதிகளவு வெளியாகும் கதிர்வீச்சு மற்றும் அணுக்கழிவு பிரச்சனைகளை குறைக்கும் பொருட்டு, கதிர்வீச்சு ஏதும் வெளிப்படாத வகையில் அணுக்கரு இணைப்பு முறையில் மின்சார உற்பத்தியை கண்டறியும் முயற்சியில் உலகளவிலான விஞ்ஞானிகள் ஈடுபட்டு வந்தனர். 

இதனை அடிப்படையாக கொண்டு, சீனாவில் உள்ள செங்கிடூ நகருக்கு அருகே HL - 2M Tokamak எனப்படும் அணுக்கரு உலையை சீனா அமைத்துள்ளது. கடந்த 1950 ஆம் வருடம் சோவியத் யூனியனில் உள்ள அதிகாரிகள் வழங்கிய தொகாமாக் அணுக்கரு பிணைப்பு உலையை அடிப்படையாக கொண்டு சீன விஞ்ஞானிகள் செங்கிடூவில் உலையை உருவாக்கியுள்ளனர். 

இது குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2006 ஆம் ஆண்டிலிருந்து சொந்தமாக அணுக்கரு பிணைப்பு உலையை உருவாக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று முதன் முதலாக இதனை இயக்கி சோதனை ஓட்டம் பார்க்கப்ட்டுள்ளது. 

இந்த சோதனை ஓட்டத்தில், ஹைட்ரஜன் மற்றும் தோரியம் வாயுக்களால் உருவான சூடு, பிளாஸ்மா வளையத்திற்குள் காந்த புலங்களை செலுத்தி அணுக்கரு பிணைப்பு ஏற்பட தொடங்கியது. இதன் மூலமாக 150 மில்லியன் டிகிரி செல்சியசுக்கு அதிகமாக வெப்பநிலை உருவானதாகவும், இந்த வெப்பம் சூரியனின் மையத்தில் இருந்த வெப்பநிலையை விட 20 மடங்கு அதிகம் என்றும் கூறப்படுகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

China Artifical Sun Creation


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->