யூடூப் பார்த்து பாப்கான் செய்த சிறுமி பரிதாப பலி.! பெற்றோர்களே குழந்தையின் செயல்பாடை கவனித்துக்கொள்ளுங்கள்.!! - Seithipunal
Seithipunal


சீனாவில் வாழும் பெண், யியா என்பது இவர் பெயர். இவர் யூ டியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் அவர் உணவு பண்டங்களை வித்தியாசமாக மற்றும் எளிமையான முறையில் தயாரிக்கும் வீடியோக்களை வெளியிட்டு வந்திருக்கிறார். சுமார் 4 கோடி பேர் யியாவின் யூடியூப் சேனலை பின் தொடர்கிறார்கள்.

இந்நிலையில், அவர் காலியான குளிர்பான டின்னை வைத்து கொண்டு பாப்கார்ன் செய்வது எப்படி என வீடியோ ஒன்றை யியா தனது யூடியூப் சேனலில் பதிவிட்டார். அந்த விடியோவை பார்த்த செசே என்னும் 14 வயது சிறுமி, தனது தோழி சியாவு (12) உடன் சேர்ந்து அதேபோல் பாப்கார்ன் செய்ய முயற்சி செய்தார்கள்.

ஆனால், இவர்கள் குளிர்பான டின்னுக்கு மாறாக மதுபான பாட்டிலை பயன்படுத்தினார். இதன் காரணமாக அந்த  பாட்டில், திடீரென வெடித்து தீவிபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் சிறுமிகள் 2 பேரும் பலத்த தீக்காயம் அடைந்தனர். செசே 93 சதவீத தீக்காயத்துடனும், சியாவு 13 சதவீத காயத்துடனும் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டார்.

மருத்துவமனையில் 2 வாரங்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், செசே சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். சியாவு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தோல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

இதற்கிடையே சிறுமியின் உயிரிழப்புக்கு யூ டியூப்பில் வீடியோ போட்ட யியாதான் காரணம் என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. எச்சரிக்கை வாசகம் குறிப்பிடாதது தவறுதான் என்றாலும், சிறுமி, தான் பயன்படுத்திய அதே கருவிகளை பயன்படுத்தவில்லை என்று யியா விளக்கமளித்தார். இருப்பினும் சிறுமியின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கோரியுள்ள அவர், இழப்பீடு வழங்கவும் முன்வந்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Child Death By Doing Youtube Channel Preparation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->