போலி சாதி ஒழிப்பு பேர்வழிகளுக்கு சவுக்கடி கொடுத்த செலின் கவுண்டர்..! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றியடைந்த ஜோ பைடனின் கொரோனா தடுப்பு நடவடிக்கை வழிகாட்டுதல் குழுவில் இடம்பெற்றுள்ள இந்திய மருத்துவர் செலின் கவுண்டர். தற்போது 43 வயதாகும் செலின் கவுண்டர், அமெரிக்காவில் மருத்துவ ஆராய்ச்சியாளராக பணியாற்றி வருகிறார். 

மேலும், அமெரிக்க காசநோய் தடுப்பு பிரிவு உதவி இயக்குனராகவும் பணியாற்றி வரும் நிலையில், செலின் கவுண்டரின் தந்தை நடராஜ், ஈரோடு மாவட்டத்தில் உள்ள மொடக்குறிச்சி பெரும்பாளையம் கிராமத்தை சார்ந்தவர் ஆவார். 

தங்களது கிராமத்தை சார்ந்த பெண்மணி அமெரிக்காவில் உயரிய பதவி வகித்து வருது அக்கிராம மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், செலின் கவுண்டர் தனது ட்விட்டர் பக்கத்தில், செலின் கவுண்டர் என்ற பெயரிலேயே கணக்கை வைத்துள்ளார். 

இந்நிலையில், எதற்காக ட்விட்டர் பக்கத்தில் ஜாதி பெயரை போட்டுளீர்கள் என்று பல புரட்சியாளர்கள் வாழ்த்துக்கள் தெரிவிக்க மனம்மில்லாமல் பதில் கருத்துக்களாக கதறி வந்த நிலையில், " கடந்த 1970 ஆம் வருடத்தில் எனது தந்தை அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். நடராஜ் என்ற பெயரை அமெரிக்கர்கள் அழைக்க சிரமப்பட்டதால், கவுண்டர் என்ற பெயரை வைத்துக்கொண்டார். 

பின்னாளில் இதுவே அவரின் பெயரும் ஆனது. எனது பெயரை நீக்க இயலாது. அது எனது அடையாளம். எனது வரலாறு " என செலின் கவுண்டர் பதிவு செய்துள்ளார். இவரின் பதில் போராளிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கூட ஆங்கிலத்தில் செலின் கவுண்டர் என்றும், தமிழில் செலின் என்றும் பதிவு செய்து வாழ்த்து கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. செலின் கவுண்டர் பத்திரிகையாளராகவும், திரைப்பட இயக்குனராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலை நாடுகளை பொறுத்த வரையில் தங்களின் பெயருக்கு அடுத்தபடியாக, தங்களின் அடையாளமான இனக்குழு பெயரை குறிப்பிடும் பொருட்டு, அவர்களின் அடையாளத்தை சேர்த்துக்கொள்வார்கள். அதனை யாருமே பெரிய விஷயமாக கருதுவதில்லை. ஆனால், வரலாறு இல்லாமல் அல்லது வரலாறு தெரியாமல் ஜாதி ஒழிப்பு பேசி ஜாதி சண்டைகளை ஏற்படுத்தும் பல கதறல் பேர்வழிகள், தனது அடையாளத்தை வெளிப்படுத்த இயலாததால், அடையாளத்தை காண்பிக்கும் நபர்களை பார்த்து கதறுவது வழக்கமாகியுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இந்நிலை இருக்கிறது. அண்டை மாநிலமான கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வடமாநிலங்களில் தங்களின் பெயருக்கு பின்னால் இனத்தின் பெயரை கட்டாயமாக சேர்த்திருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Celine Gounder Tweet could not Change my Identity about Gounder Caste


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->