ஸ்ரீ சுவாமிநாராயண் கோவிலில் 30-ஆம் ஆண்டு விழா: பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ், மனைவியுடன் பங்கேற்பு..!
British King Charles III Attends 30th Anniversary Celebrations at Sri Swaminarayan Temple
பிரிட்டன் தலைநகர் லண்டனில் புகழ்பெற்ற, ஸ்ரீ சுவாமிநாராயண் கோவில் உள்ளது. இந்த கோவிலின் 30-ஆம் ஆண்டு விழாவில் பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ், மனைவி ராணி கமிலாவுடன் பங்கேற்று சிறப்பு வழிபாடு செய்துள்ளார்.
ஐரோப்பாவின் முதல் பாரம்பரிய ஹிந்து கோவிலான ஸ்ரீ சுவாமிநாராயண் கோவில் 1995-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. பிரிட்டனின் நீஸ்டனில் கட்டப்பட்டுள்ள இந்த கோவில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆன்மிக மற்றும் கலாசார அடையாளமாக திகழ்கிறது.

கோவிலின் 30-ஆம் ஆண்டு விழாவையொட்டி பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ், ராணி கமிலா வருகை தந்தனர். ஹிந்து புனிதத்தை கடைப்பிடித்து அவர்கள், காலணிகளை கழற்றி வைத்துவிட்டு கோவிலுக்குச் சென்ற இருவருக்கும், மாலை அணிவித்து பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.
அத்துடன், இந்த கோவிலை நிர்வகிக்கும் பி.ஏ.பி.எஸ்., எனப்படும் போச்சசன்வாசி அக் ஷர் புருஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்தா என்ற அறக்கட்டளையின் செயல்பாடுகளை பாராட்டியுள்ளனர். அப்போது பிரான்சின் பாரிஸ் நகரில், அடுத்தாண்டு செப்டம்பரில் திறக்கப்பட உள்ள ஸ்ரீ சுவாமிநாராயண் கோவில் குறித்தும் அரச தம்பதியினருக்கு விளக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
English Summary
British King Charles III Attends 30th Anniversary Celebrations at Sri Swaminarayan Temple