நூலிழையில் உயிர் தப்பிய 200 பயணிகள்.. பிரிட்டிஷ் ஏர்வேஸ் அதிர்ச்சி தகவல்.!! - Seithipunal
Seithipunal


ஈரான் மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு இடையே முப்பொழுதும் இல்லாத அளவிற்கு மோதலானது அதிகரித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமைகளில் ஈராக் நாட்டில் அமெரிக்கா மேற்கொண்ட வான்வழி தாக்குதலில் ஈரான் நாட்டுடைய இராணுவ தளபதி காசிம் சுலைமானி கொலை செய்யப்பட்டார். 

இதனைத்தொடர்ந்து இரண்டு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றமானது உருவாகியுள்ள நிலையில்., அமெரிக்காவுடைய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக., ஈராக் நாட்டில் இருக்கும் அமெரிக்கா படைகளின் மீது ஈரான் சுமார் 12 ஏவுகணை வீசி தாக்குதலை மேற்கொண்டது. 

இந்த தாக்குதலில் 80 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில்., இந்தியாவின் மும்பை நகரில் இருந்து இங்கிலாந்து நாட்டில் உள்ள இலண்டன் நகருக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் சென்று கொண்டு இருந்துள்ளது. 

இந்த விமானம் ஈராக் நாட்டின் வான்வெளியில் நுழைந்த நிலையில்., ஏதென்ஸ் வழியாக இலண்டன் நோக்கி பயணம் செய்துள்ளது. இந்த நேரத்திலேயே அமெரிக்க படைகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியது அரங்கேறியுள்ளது. இந்த தாக்குதலின் போது பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் தப்பியதும்., 200 க்கும் மேற்பட்ட பயணிகள் நூலிழையில் உயிர் தப்பியதும் தெரியவந்துள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

British airways flight lucky missed accident Iran america attack


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->