இந்தியா உட்பட பல நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி விநியோகம் - அமெரிக்க அதிபருக்கு குவியும் பாராட்டு.! - Seithipunal
Seithipunal


கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட பல நாடுகள், கொரோனா தாக்கத்தில் இருந்து விடுபட தொடர்ந்து போராடி வருகிறது. மேலும், பல நாடுகள் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை முழு வீச்சில் களமிறக்கி செயல்பட்டு வருகிறது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியா உட்பட பல நாடுகளுக்கு அமெரிக்கா 2.5 கோடி தடுப்பூசிகளை அனுப்பி வைத்து உதவி செய்ய முன்வந்து இருக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் அமெரிக்காவின் உதவி பல நாடுகளுக்கு பேருதவியாக அமைந்துள்ளது.

உலக நாடுகளுக்கு தடுப்பூசி வழங்க முன்வந்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகத்திற்கு அமெரிக்க எம்.பிக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக அமெரிக்க செனட் சபை எம்.பி ஜான் கார்னின் தெரிவிக்கையில், " கொரோனா தடுப்பூசிகளை பல நாடுகளுக்கும் அனுப்பி வைக்க முன்வந்துள்ள ஜோ பைடனின் நிர்வாகத்திற்கு பாராட்டுகளை தெரிவிக்கிறேன் " என்று தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Biden Wish by Global Countries to sent Vaccine 6 June 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->