நோக்கியா செல்போனை விழுங்கிய நபர்.. அறுவை சிகிச்சை செய்து உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்.! - Seithipunal
Seithipunal


பெலாரசில் உள்ள கோசாவா நாட்டின் ஓல்டு பிரிஸ்ட்டினா பகுதியை சார்ந்த 33 வயது நபர், 2000 ஆம் வருடத்தில் வெளியான நோக்கியா 3310 மாடல் மொபைல் போனை விழுங்கியுள்ளார். இதனால் அவர் வயிற்று வலியால் துடித்து இருக்கிறார். 

இதனையடுத்து, மருத்துவமனைக்கு சென்ற அவர் மருத்துவரிடம் விஷயத்தை கூறவே, அவரை மருத்துவர் எக்ஸ்ரே எடுத்து பார்த்துள்ளார். எக்ஸ்ரேவின் வழியாக செல்போன் இருக்கும் இடத்தினை கண்டறிந்த மருத்துவர்கள், 2 மணிநேரம் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். 

அறுவை சிகிச்சையின் இறுதியில் செல்போன் வெளியே எடுக்கப்பட, இதுகுறித்த புகைப்படத்தை மருத்துவர் வெளியிட்டுள்ளார். மேலும், இதுபோன்று யாரும் மேற்கொள்ள வேண்டாம் என்ற அறிவுரைக்காக புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும், செல்போனை விழுங்கினால் அதன் பேட்டரி வெடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Belarus man Nokia Mobile Removed from Stomach by Surgery


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->