"வீட்ல யாருங்க பசிக்கிது.?" கதவை திறந்தால் காத்திருக்கும் அதிர்ச்சி.!  - Seithipunal
Seithipunal


சுகோட்கா பிராந்தியத்தில் இருக்கும் ரிர்காப்பி என்ற கிராமத்தில் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றது. மேலும் பொது இடங்களில் கரடிகள் குடியிருப்பு பகுதிகளை தாக்காமல் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரும் இதற்கு பருவநிலை மாற்றம்தான் காரணம் என்று தெரிவிக்கின்றனர். கடற்கரை பகுதியில் குறைந்த அளவில் பனி இருப்பதால் அவை கடலில் விடுத்து உணவைத்தேடி கிராமத்திற்குள் வந்து இருக்கின்றது என்று அவர்கள் கூறுகின்றனர். மேலும், சிலர் இந்த கிராமத்திற்கு பனிக்கரடிகள் வருவது தொடர்கதையாக ஒன்றுதான். அந்த பகுதியில் இருக்கும் மக்கள் நிரந்தரமாக வெளியேற்றப்பட வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

Image result for பனி  SEITHIPUNAL

இந்த கிராமத்தில் சுமார் 56 கரடிகள் இருக்கின்றது என்றும், சிறிய மற்றும் பெரிய கரடிகளும், பெண்களும், குட்டிகளும் இதில் அடங்கும் என்றும், இதில் பெரும்பாலான கரடிகள் மிகவும் ஒல்லியாகத்தான் இருக்கிறது என்றும் கரடிகள் பாதுகாப்பு திட்டத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். 

இந்த இடத்திலிருந்து சுமார் 2.2 கிலோ மீட்டர் தூரத்தில் தான் கரடிகள் வசித்து வருகின்றது. ஆனால், அந்த இடமானது வழக்கத்தை காட்டிலும் வெப்பம் அதிகமாக இருக்கின்றது. இதன் காரணமாகத்தான் கரடிகள் கிராமத்திற்குள் நுழைந்ததாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சார்பில் தெரிவிக்கப்படுகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BEAR IN VILLAGE


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->