மேன் விஷஸ் வைல்டுடன் கைகோர்த்த நரேந்திர மோடி.! படகு சவாரியுடன் காட்டிற்குள் கொண்டாட்டம்..!! - Seithipunal
Seithipunal


எட்வர்ட் மைக்கேல் கிரில்ஸ் ஓபிஇ என்ற இயற்பெயரை கொண்ட பியர் கிரில்ஸ் என்று அணைத்து மக்களாலும் அழைக்கப்படுபவர். இவர் பிரிட்டிஷ் முன்னாள் எஸ்ஏஎஸ் (SAS serviceman) சேவையாளர் ஆவார், இதுமட்டுமல்லாது உயிர்வாழும் பயிற்றுவிப்பாளர் மற்றும் கெளரவ லெப்டினன்ட்-கர்னல் ஆவார். அவரது இராணுவ வாழ்க்கைக்கு வெளியே தலைசிறந்த சாகசக்காரர்., எழுத்தாளர்., தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் தொழிலதிபர் என்று தன்னுள் பல திறமைகளை கொண்டவர்..

உலகம் முழுவதும் ஒளிபரப்பாகும் discovery தொலைக்காட்சியானது., அந்தந்த கண்டங்கள் மற்றும் நாடுகளின் உள்நாட்டு மொழிகளில் தங்களின் நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறது. இந்த தொலைக்காட்சியில் பல விதமான மனதிற்கு உற்சாகம்., பதற்றம்., பயம்., விலங்குகளின் வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. 

Tamil online news Today News in Tamil

discovery channel, discovery channel tamil, discovery channel india,

இதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிதான் man vs wild. இந்த நிகழ்ச்சியை பியர் க்ரில்ஸ் (Bear grylls) தைரியமாக எதிர்கொண்டு பல சாகசங்கள் செய்து வருகிறார். உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் இருக்கும் வனப்பகுதிகள்., பாலைவனம் மற்றும் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளுக்கு சென்று., மக்கள் சில தவறுதலான காரணத்தால் வழிதவறி போகும் பட்சத்தில் எவ்வாறு உயிர்வாழ்ந்து வெளியேறுவது என்று கற்றுக்கொடுப்பர். 

bear grylls, man vs wild, Kate Winslet, titanic heroine,

இந்த நிகழ்ச்சியின் போது பல விதமான உடற் காயங்கள் மற்றும் கிடைக்கும் உணவுகள் என்னவாக இருந்தாலும் சாப்பிட்டு உயிரை காப்பாற்றி கொள்வது போன்ற அனைத்தையும் கற்றுக்கொடுப்பர். இவரது நிகழ்ச்சியின் வளர்ச்சியை தொடர்ந்து பல நாட்டில் உள்ள நடிகர் நடிகைகளும்., பல நாட்டின் அரசியல் பிரமுகர்களும் இவருடன் சாகச பயணத்தை மேற்கொள்ள விரும்பி செய்து வருகின்றனர். 

இவருடன் டைட்டானிக் கதாநாயகி பயணித்து., இறுதியில் அன்பான முத்தத்தை பியருக்கு பரிசாக வழங்கினார். அமெரிக்கா முன்னாள் அதிபரான ஒபாமாவும் பயணம் செய்திருந்தார். மேலும்., இந்தியாவின் இமயமலைக்கும் வருகை தந்து சென்று இருந்தார். இந்த நிலையில்., இந்தியாவின் பிரதமரான நரேந்திர மோடியும் பியர் கிரில்ஸ்சுடன் பயணம் செய்துள்ளார். இது தொடர்பாக பியர் கிரில்ஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு 9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்..

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்...


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bear grylls do a adventure with Indian prime minister narenthira modi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->