#சற்றுமுன்: கடன்காரன் நீரவ் மோடியை நாடுகடத்த இங்கிலாந்து அமைச்சகம் ஒப்புதல்.! - Seithipunal
Seithipunal


இந்திய வங்கிகளில் தொழில் செய்கிறேன் என்ற பெயரில் கடனை வாங்கிவிட்டு, இங்கிலாந்து நாட்டிற்கு தப்பி சென்ற வங்கிக்கடனாளி நீரவ் மோடி. இந்திய வங்கிகளில் மொத்தமாக ரூ.14 ஆயிரம் கோடி அளவில் கடன் வாங்கி இங்கிலாந்திற்கு தப்பி சென்றார். 

இதனையடுத்து, இந்திய அரசு நீரவ் மோடியை இந்தியாவிற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொள்ள தயாரான நிலையில், அவர் இங்கிலாந்தில் இருந்ததால் இங்கிலாந்தில் உள்ள இலண்டன் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. பலகட்ட விசாரணைக்கு பின்னர் நீரவ் மோடியை நாடுகடத்த இலண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், நீரவ் மோடியை நாடுகடத்த பிரிட்டன் அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. முன்னதாக இலண்டன் நீதிமன்றம் நீரவ் மோடியை நாடுகடத்த உத்தரவு அளித்திருந்த நிலையில், பிரிட்டன் அமைச்சகமும் இந்த விஷயத்திற்கு தனது ஒப்புதலை வழங்கியுள்ளது.

வங்கிகளில் ரூ.14 ஆயிரம் கோடி அளவில் கடன் வாங்கி மோசடி செய்து இங்கிலாந்திற்கு தப்பி சென்ற நீரவ் மோடி விரைவில் இந்தியாவிற்கு நாடுகடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bank Loan Begger Nirav Modi extradition of India Approved by United Kingdom's Home Minister 16 April 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->