ஆலங்கட்டி மழை... புழுதிப் புயல்.. வரிசையில் வந்து புரட்டி எடுக்கும் காலநிலை மாற்றம்..! - Seithipunal
Seithipunal


ஸ்திரேலியா நாட்டில் மீண்டும் ஆலங்கட்டி மழை பெய்திருக்கிறது. மேலும், உருவான புழுதிப் புயலால் அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

மேலும், ஆஸ்திரேலியாவில் 6 மாதங்களாகப் பற்றி எரிந்த காட்டுத் தீயின் காரமாக வாடி வதங்கிய ஆஸ்திரேலிய மக்கள், காட்டு தீயினால் ஏற்பட்ட புகை மற்றும் சாம்பலினால் சுவாசிக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.

இந்த நிலையில், தற்போது வனப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக பற்றி எரிந்துகொண்டிருந்த, காட்டுத் தீ படிப்படியாக கட்டுக்குள் வந்துள்ளது. மேலு, கடந்த சில நாட்களாக அந்நாட்டில் அதீத குளிர்ச்சி காரணமாக ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது. கான்பெரா மற்றும் சிட்னி போன்ற நகரங்களில் 2வது நாளாக கடுமையான ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது.

கோழி முட்டை அளவிற்கு வந்து விழும் அந்த ஆலங்கட்டிகளானது அங்குள்ள வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைந்தது. இதை தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் பாலைவனப்பகுதிகளில் எழுந்து வரும் மிகப் பெரும் புழுதிப் புயலும் மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கி இருக்கிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

australia suffered for climate change


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->