பள்ளிகளில் இரண்டாவது மொழி பாடமாகும் தமிழ்! தமிழ் மொழிக்கு கிடைத்த கௌரவம்!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் அனைவரும் இந்தி கற்கவேண்டும், அப்போது தான் நம் நாட்டை முன்னேற்ற முடியும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் அமித்ஷாவின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் இரண்டாம் மொழிப்பாடமாக தமிழ் மொழியை தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது தமிழ் மொழியை கௌரவம் படுத்தும் வகையில் அமைந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் மாகாணத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் தமிழ் மொழியும் ஒரு படமாக கற்றுத்தரப்படும் என நியூ சவுத் வேல்ஸ் மாகாண அரசு அறிவித்துள்ளது. 

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை இரண்டாவது மொழிப்பாடமாக தமிழ் பாடமாக கற்றுத்தரப்படும் தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பான தமிழ் மொழிப்பாடம் உள்ளடங்கிய புதிய பாடத்திட்டத்தையும் அம்மாகாண அரசு வெளியிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

australia schools second language for tamil


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->