அதிரடியாக பறிபோகும் வேலைவாய்ப்புகள்.! தலையில் கைவைக்கும் குடும்பத்தலைவன்கள்.! - Seithipunal
Seithipunal


கொரோனா வைரஸ் பரவி வருவதால் உலகமெங்கும் பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் உலகில் இருக்கும் பெரிய நிறுவனங்கள் அனைத்தும் தங்களுடைய ஊழியர்களுக்கு மாத சம்பளம் கொடுக்க முடியாத நிலைக்கு ஆளாகி உள்ளது. 

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நிறுவனம் குவாண்டஸ். தற்போது, அந்த நிறுவனம் ஊழியர்கள் 6000 பேரை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. 

மேலும், 15 ஆயிரம் ஊழியர்களுக்கு இந்த ஆண்டு இறுதிவரை கட்டாய விடுப்பு அளிக்க முடிவு எடுத்துள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பை நிறுவனம் சந்தித்துள்ளது. எனவேதான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இன்னும் ஒரு வருடத்திற்கு 100 விமானங்களை இயக்க போவதில்லை என்றும், அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Australia Qantas flight dismiss workers due to corona


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->