தனிமைப்படுத்தப்பட்ட விடுதியில் இருந்து தப்பி காதலியை சந்திக்க சென்ற நபர்... காவல்துறை தடாலடி சம்பவம்.!! - Seithipunal
Seithipunal


கரோனா வைரஸின் தாக்கமானது உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெரும்பாலன நாடுகளில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. கரோனா வைரஸின் வீரியத்தை சில நாடுகளில் உள்ள மக்கள் புரிந்துகொள்ளாது, அமலாகியுள்ள ஊரடங்கை மீறி வருகின்றனர். 

இவர்களின் மீது அந்தந்த நாடுகளின் சட்டதிட்டங்கள் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வகையில், ஆஸ்திரேலிய நாட்டிலும் ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில், ஊரடங்கி மீறும் நபர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள பெர்த் நகரில் இருக்கும் விடுதியில் ஏராளமான நபர்களை தனிமைப்படுத்தி வைத்துள்ளனர். இந்த விடுதியில் தங்கியிருந்த ஜொனதன் டேவிட் (வயது 35) என்ற வாலிபர் காவல் துறையினர் மற்றும் சுகாதார பணியாளர்களின் கண்களில் மண்ணைத்தூவி விடுதியில் இருந்து வெளியேறியுள்ளார். 

இவர் விடுதியில் இருந்து தப்பித்தாலும், வழியிலேயே காவல் துறையினரிடம் சிக்கிய நிலையில், ஊரடங்கை மீறியதன் காரணமாக கைது செய்து நீதிபதிக்கு முன்னிலையில் சமர்ப்பித்துள்ளனர். நீதிபதியிடம் ஜொனாதன் டேவிட் உணவு வாங்க சென்றதாக தெரிவித்த நிலையில், நீதிபதி எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்துள்ளார். 
 
இந்த நிலையில், மீண்டும் விடுதிக்கு சென்ற பின்னர் விடுதியில் இருந்து வெளியேறவே, காவல் துறையினர் கைது செய்த சமயத்தில் தனது காதலியை சந்திக்க சென்றதை ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து நீதிபதி 1 மாத சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார். இதனால் ஜொனாதன் டேவிட் அங்குள்ள சிறையில் கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறார்.

Tamil online news Today News in Tamil    


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Australia man try to meets her love girl during under quarantine


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->