சீனாவை எதிர்க்க உலக சீன எதிர்ப்பு நாடுகள் ஓரணியில் திரள வேண்டாம் - ஆஸி. முன்னாள் பிரதமர்.! - Seithipunal
Seithipunal


சீனாவின் யூகான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸானது உலக நாடுகள் முழுவதும் பரவி பெரும் சோகத்தை தந்துள்ளது. சீனா வேண்டும் என்றே கொரோனா வைரஸை உலக நாடுகளுக்கு பரப்பி விட்டுள்ளது என அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆணித்தரமாக குற்றச்சாட்டினை முன்வைத்தார். 

இவ்வாறான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட நாடுகளில் ஒன்றாக இருக்கும் ஆஸ்திரேலியா, சீனாவிடம் கொரோனா வைரஸ் குறித்த விசாரணை நடத்தவும் வற்புறுத்தியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கானது நீடித்து வருகிறது. 

சீனா - ஆஸ்திரேலிய நாடுகளுக்கு இடையேயான இணக்கமான உறவு முந்தைய காலங்களில் இல்லாத வகையில் கடுமையான அளவு மோசமடைந்துள்ள நிலையில், உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து சீனாவை எதிர்க்க வேண்டும் என ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் கெவின் ரட் (Kevin Rudd) தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், " சீனாவின் பொருளாதாரம் மற்றும் புவிசார் எல்லைகள் தொடர்பான வற்புறுத்தலை உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும். உலக நாடுகள் ஒன்றிணைந்து சீனாவை எதிர்க்க வேண்டும். தனியொரு நாடாக எதுவும் செய்ய முடியாது. மனித உரிமை மீறல் தொடர்பான விஷயத்தில் மேற்கத்திய நாடுகள் சீனாவை எதிர்க்க தயங்க கூடாது. 

உலகளவிலான நாடுகளுக்கு சீனாவுடன் எதிர்ப்பு இருப்பின், தனியாக அவர்களை எதிர்க்காமல் சீனாவிற்கு எதிரான நாடுகள் ஓரணியில் திரள வேண்டும். அப்போது தான் சீனாவின் ஆதிக்கம் அடங்கும். சீனாவுக்கு எதிரான இருதரப்பு கொள்கையை அவர்கள் செயல்படுத்த இயலாது " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Australia Former Prime Minister Kevin Rudd Calls World Courtiers Against China to Battle 30 May 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->