வேளாண் விளைபொருட்களை தீயிட்டு கொளுத்தி அழிக்கும் ஆஸி., விவசாயிகள்.. எலித்தொல்லையால் சோகம்.! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவில் விவசாயிகள் தங்கள் சொந்த பயிர்களை எரிக்கும் சோகம் அரங்கேறி வருகிறது. வைக்கோல்களுக்குள் தானியங்களை குவித்து வைக்கும் ஆஸ்திரேலிய விவசாயிகள், சில நாட்கள் கழித்து எலிகள் அங்கு சேர்ந்ததும், அதனை மொத்தமாக தீயிட்டு கொளுத்தி வருகின்றனர். விவசாய நிலங்களில் அறுவடை செய்து வைத்துள்ள பொருட்களை எலிகள் தங்களுக்கு இரையாக்கி வருவதால், விவசாயிகள் இம்முடிவை எடுத்துள்ளனர். 

மேலும், எலிகளால் பரவும் பிளேக் நோயின் தாக்கத்தில் இருந்து தங்களை தற்காத்து கொள்ளவும் எலிகளை ஆஸ்திரேலிய விவசாயிகள் சொந்த விலை பொருட்களை தீயிட்டு கொளுத்தும் சோகத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். 

விவசாய பகுதிகள் எலிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு, மில்லியன் கணக்கான பயிர் இழப்பை ஏற்படுத்தியுள்ளன. இதனால் இந்த முடிவை எடுப்பதை தவிர, வேறு எந்த வழியும் எங்களுக்கு இல்லை என்றும் அவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

மேலும், முதலில் வறட்சி., பின்னர் வெள்ளம். இப்போது, ​​மில்லியன் கணக்கான எலிகள் எங்களை வாட்டி வதைக்கிறது என்றும் விவசயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர். எலிகள் மனிதர்களுக்கு ஆபத்தான வைரஸ்களையும் கொண்டு செல்கிறது என்பதால், ஆஸ்திரேலிய விவசாயிகள் சோக முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Australia Farmers Burn Agricultural products due to Mouse Occupy and Avoid Mouse Plague Disease


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->