புனித நதிகள் புனிதமாகும் கதை... இயல்பு நிலைக்கு திரும்பிய பிரம்மபுத்திரா..!! - Seithipunal
Seithipunal


கரோனா வைரஸின் அச்சுறுத்தல் உலகளவில் பெரும் சவாலாக இருக்கிறது. மேலைநாடுகள் கூட கரோனாவின் கோரப்பிடியில் சிக்கி செய்வதறியாது மக்களை பரிதாபமாக பலி கொடுத்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் குறைந்தளவு இருந்தாலும், முன்னதாகவே தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

கரோனா வைரஸ் சமூக தொற்றாக மாறாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு, அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து பிற தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதித்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. 

இதனால் வீதிகள் எங்கும் குப்பைகள் பரவுதல் தடுக்கப்பட்டது, தொழிற்சாலைகள் நிறுத்தப்பட்டு காற்று மாசு கட்டுப்படுத்தப்பட்டது, பாழடைந்த நீர் நிலைகள் மற்றும் நிலத்தடி நீர் ஆதாரங்கள் சற்று தெளிவை கண்டது, விலங்குகள் வீதிகளில் மகிழ்ச்சியுடன் உலா வந்தது, வாகனங்கள் உபயோகம் முற்றிலும் முடக்கப்பட்டு பெருமளவு ஏற்படும் விபத்துகள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது, காற்று மாசு குறைக்கப்பட்டது. 

இந்த நிலையில், இந்தியாவின் பெரிய நதிகளில் ஒன்றாக விளங்கும் பிரம்மபுத்திரா நதி அங்குள்ள தொழிற்சாலைகளின் காரணமாக ஏற்பட்ட மாசுக்கள் மற்றும் அழிவுகள் நாம் அறிந்த ஒன்று. ஊரடங்கின் காரணமாக தற்போது பிரம்மபுத்திரா நதி மிகவும் தெளிவாக இருக்கிறது. இதன் மாசுக்கள் பெருமளவு குறைந்துள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Assam Brahmaputra river cleaned due to stops industry corona curfew


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->