ஏ.சியை சுத்தமில்லாமல் உபயோகம் செய்தால் புற்றுநோய், இதய நோய் ஏற்பட வாய்ப்பு - மருத்துவர்கள் எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


சுத்தம் செய்யப்படாத ஏ.சி போன்ற இயந்திரத்தால் புற்றுநோய் மற்றும் இதயநோய் ஏற்படுகிறதா? என்பது தொடர்பாக யூகோவ் நிறுவனம் அமீரகத்தில் ஆய்வு மேற்கொண்டு வந்தது. இது தொடர்பான ஆய்வு அறிக்கை தற்போது வெளியாகி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அமீரகத்தில் கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், பல கட்டிடங்களில் ஏ.சி இயந்திரம் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது. ஏ.சி எந்திரங்களை அவ்வப்போது சரியாக பராமரித்து சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பிட்ட இடைவெளியில் அதனை சுத்தம் செய்வது சரியான சுகாதாரம் ஆகும். 

அறைகளுக்குள் பயன்படுத்தப்படும் ஏ.சி இயந்திரங்களை சரியாக தூய்மை செய்யாத பட்சத்தில் பல உடல்நலக்கோளாறுகள் ஏற்படுகிறது. இந்த விஷயத்தை அமீரக தனியார் மருத்துவர்கள் டைம் பாம் என்றும் எச்சரிக்கை விடுகின்றனர். 

மேலும், இதனால் புற்றுநோய் மற்றும் இதய நோய் ஏற்பட இருப்பதாகவும் எச்சரிக்கை விடுகின்றனர். மோசமான நிலையில் பராமரிக்கப்படும் ஏ.சி இயந்திரத்தால் தலைவலி, தலைசுற்றல் மற்றும் நிமோனியா போன்ற நோய்களும் அதிகளவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. 

அறையில் இருக்கும் காற்று தூய்மையாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் பாக்டீரியா, வைரஸ் கிருமிகள் ஏ.சி இயந்திரத்தில் அதிகளவில் சேரும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அமீரகத்தை பிரௌத வரையில் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் என 90 விழுக்காடு இடங்களில் ஏ.சி பயன்பாடு இருக்கிறது. 

ஏ.சியை சரியாக பராமரிக்காத பட்சத்தில் கார்பன் மோனாக்சைடு, கார்பன் டை ஆக்ஸைடு, பாக்டீரியா, பிரிண்டர் ரசாயனம், பூச்சிக்கொல்லிகள், வாகன புகை போன்றவை கலப்பது அதிகமாகி புற்றுநோய் மற்றும் இதய நோய் ஏற்படும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். 

மேலும், அமீரகத்தை பொறுத்த வரையில் மொத்த ஏ.சி பயன்பாட்டில் 13 விழுக்காடு பேர் மட்டுமே அதனை சுத்தம் செய்து உபயோகம் செய்யும் விழிப்புணர்வை பெற்றுள்ளார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arab Emirates Doctors Warn about Un Clean Air Condition Cause Heart Problem and Cancer


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->