தமிழர்களின் பரம்பரியதோடு ஜோ பைடனுக்கு கோலமிட்டு வரவேற்பு..! - Seithipunal
Seithipunal


தமிழர்களின் பாரம்பரியத்தில் வாயில்களில் அழகான வரவேற்பாக கோலங்கள் இடம்பெற்று இருக்கும். இந்நிலையில், அமெரிக்காவில் ஜனாதிபதியாக பொறுப்பேற்கவுள்ள ஜோ பைடனை வரவேற்கும் பொருட்டு கோலங்கள் இடம்பெற்றுள்ளது. 

அமெரிக்காவின் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்கவுள்ள கமலா ஹாரிஸ், வரும் 20 ஆம் தேதி பொறுப்பேற்கவுள்ளார். இந்த நிகழ்வை கொண்டாடும் பொருட்டு அமெரிக்காவில் உள்ள 1800 க்கும் மேற்பட்டோர் கோலங்களை உருவாக்கியுள்ளனர்.

அமெரிக்காவின் புதிய நிர்வாகத்திற்கு நல்ல தொடக்கமாக அமையவும், புதிய நிர்வாகத்திற்கு வரவேற்பு தெரிவிக்கும் பொருட்டும் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் காட்சிப்படுத்த அனுமதியும் வழங்கப்பட்டு இருந்த நிலையில், இறுதி நேரத்தில் பாதுகாப்பு காரணமாக அனுமதி இரத்து செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து பலரும் தங்களின் இல்லங்களில் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் தலைமையிலான அரசை வரவேற்கும் பொருட்டு தங்களின் இல்லத்தில் கோலங்களை வரைந்து வருகின்றனர். இந்த கோலங்களை ட்விட்டர் தளத்தில் #2021Kolam என்ற ஹாஸ்டேக்கிலும் பகிர்ந்து வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

American President Joe Biden Welcomes by Tamil Tradition Kolam


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->