அமெரிக்க அதிபர் ஜோ பைடன் - சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் கலந்துரையாடல்.! - Seithipunal
Seithipunal


அமெரிக்க அதிபர் ஜோ பைடன் - சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் உரையாடினார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

உலகின் இருபெரும் வல்லரசு நாடுகளாக இருக்கும் அமெரிக்காவும் - சீனாவும் எதிரெதிர் பக்கத்தில் இருக்கிறது. சீனாவின் எல்லை ஆக்கிரமிப்பு பிரச்சனை, பசுபிக் பிராந்திய அச்சுறுத்தல், தைவான் மற்றும் ஹாங்காங் பிரச்சனை என்று பல விஷயங்களில் அமெரிக்கா சீன நாட்டினை கடுமையாக கண்டித்து இருக்கிறது. 

கடந்த கொரோனா காலத்திற்கு முன்னதாக அமெரிக்கா சீனாவின் மீது பொருளாதார தடையினை விதித்து அதிரடியாக உத்தரவிட்டார். பதிலுக்கு நாங்களும் பொருளாதார தடை விதைப்போம் என சீனாவும் அமெரிக்காவின் மீது பொருளாதார தடை விதிப்பதாக மிரட்டியது. 

தற்போது அமெரிக்காவில் ஆட்சி மாற்றம், உலகளவில் கொரோனா பாதிப்பு என்ற சூழ்நிலை தொடர்ந்து நிலவி வரும் காரணத்தால், பல்வேறு விஷயங்களில் அமெரிக்காவும் - சீனாவும் இணைந்து மீண்டும் பணியாற்ற தொடங்கி இருக்கிறது. ஆனால், சில சர்ச்சைக்குரிய பிரச்சனைகள் தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், இன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் கலந்துரையாடியதாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பில், " அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் இன்று பேசினார். இந்த விவாதம், ஜனாதிபதி பைடன் தெளிவுபடுத்தியது போல, அமெரிக்கா மற்றும் சீனா இடையே போட்டியை பொறுப்புடன் நிர்வகிக்க அமெரிக்காவின் தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாகும்.

ஜனாதிபதி பைடன் இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றில் அமெரிக்காவின் நீடித்த ஆர்வத்தை வலியுறுத்தினார். உலகமும், இரு தலைவர்களும் போட்டி மோதலில் சிக்காமல் இருப்பதை உறுதி செய்ய இரு நாடுகளின் பொறுப்பை விவாதித்தனர் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

American President Joe Biden and China President Xi Jinping Talks Announced by White House


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->