எஸ்-400 ரக ஏவுகணை தொடர்பாக இந்தியாவிற்கு அமெரிக்கா எச்சரிக்கை - பொருளாதார தடை மிரட்டல்.! - Seithipunal
Seithipunal


எதிரிநாட்டு ஏவுகணைகளை இடைமறித்து, 400 கிமீ தொலைவில் வந்தாலும் தாக்கும் வல்லமையை பெற்ற எஸ்-400 ரக ஏவுகணையை கொள்முதல் செய்ய, கடந்த 2018 ஆம் வருடத்தில் பிரதமர் மோடி மற்றும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஒப்பந்தம் செய்துகொண்டனர். 

இந்திய மதிப்பில் ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பில் கையெழுத்தான ஒப்பந்தத்திற்கு, இந்தியா ரஷியாவிடம் முன்பணத்தை செலுத்திவிட்டது. மீதமிருக்கும் பணத்தை செலுத்தும் நடைமுறைகளும் நடைபெற்று வருகிறது. எஸ்-400 ஏவுகணை தடுப்பு ஆயுதத்தின் முதல் தொகுப்பை இந்தியாவிடம் வழங்க ரஷியா தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது. 

ஆனால், இந்தியாவின் இந்த செயலை துவக்கத்தில் இருந்தே அமெரிக்கா எதிர்த்து வரும் நிலையில், எஸ்-400 ரக ஏவுகணையை வாங்கும் முயற்சியை இந்தியா கைவிட வேண்டும் என்றும், மீறினால் இந்திய - அமெரிக்கா உறவுகள் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்தது. 

இந்நிலையில், ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ரக ஏவுகணையை இந்தியா வாங்கினால், இந்தியாவின் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரிக்கை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின்னரும் எஸ்-400 ரக ஏவுகணையை இதே நிலை தொடரும் என்றும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America Warn to India about S 400 Missile


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->