சீனாவின் யூகான் ஆய்வகம் கட்டிய 2 வருடத்திற்குள் ஆபத்தான கழிவை பராமரிக்க நிதி - பரபரப்பு அறிக்கையை வெளியிட்டது அமெரிக்கா.! - Seithipunal
Seithipunal


யூகான் வைராலஜி ஆய்வகம் கட்டி முடிக்கப்பட்ட 2 வருடத்திற்குள் அபாயகரமான கழிவை பராமரிக்க சீன அரசிடம் நிதி கேட்டு வைராலஜி ஆய்வகம் கோரிக்கை வைத்த பரபரப்பு தகவலை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

உலக நாடுகளை பெரும் இன்னலுக்கு உள்ளாகியுள்ள கொரோனா வைரஸால் பாதிப்பு எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு அலையில் சிக்கி தவித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி கொரோனவால் 19.95 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், அமெரிக்காவின் குடியரசு கட்சி வெளியுறவு குழு பிரதிநிதி மைக்கேல் கொரோனா குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டார். இந்த அறிக்கையில், " சீனாவின் யூகான் சந்தையில் இருந்து கொரோனா பரவவில்லை. யூகான் வைரஸ் ஆய்வகத்தில் அது விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆய்வு கூடத்தில் மனிதரை தாக்கும் கொடிய வைரஸை உருவாக்கி, அதனை அறியாதபடி மறைக்கும் பணியும் நடந்துள்ளது. இந்த வஸ்யம் தொடர்பான ஆதாரங்கள் அதிகளவு கிடைத்துள்ளது. கடந்த 2019 செப்டம்பர் 12 ஆம் தேதிக்கு முன்னதாகவே யூகான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா கசிந்துள்ளது. 

யூகான் ஆய்வகத்தில் அபாயத்தன்மையுள்ள கழிவை பராமரிக்க மற்றும் சீரமைக்க நிதி கோரப்பட்டுள்ளது. யூகான் ஆய்வகம் செயல்பட தொடங்கிய 2 வருடத்திற்குள் இவர்களுக்கு ஆய்வகத்தின் அபாயகரமான கழிவுகளை கையாள வசதிகள் தேவைப்பட்டுள்ளது " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America Statement about Wuhan Virology Institute Corona Leakage 3 August 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->