உக்ரைன் மீது தற்போது ரஷ்யா அணு ஆயுத தாக்குதல் நடத்த வாய்ப்பில்லை - அமெரிக்கா - Seithipunal
Seithipunal


உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான போர் 7 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் படைகள் ரஷ்ய கட்டுப்பாட்டிலிருந்த முக்கிய நகரங்களை மீண்டும் கைப்பற்றின.

இதனால் பெரும்பாலான இடங்களில் ரஷ்ய படைகள் பின்வாங்கியுள்ளதால், வீரர்களை அணி திரட்டுவதற்கான முயற்சியில் ரஷ்யா ஈடுபட்டு வருகிறது.

மேலும் மேற்கத்திய நாடுகள் நேரடியாக தலையிட்டால் நாங்கள் அணு ஆயுதத்தை பயன்படுத்துவோம் என்று புடின் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் புடினின் அணு ஆயுதம் தொடர்பான மிரட்டல் தீவிரமானது என்றும், தற்போதைக்கு உக்ரைன் மீது ரஷ்யா அணு ஆயுத தாக்குதல் நடத்த வாய்ப்பு இல்லை என்றும், அமெரிக்கா தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஷ்ய அதிபரின் மிரட்டலை அமெரிக்கா தீவிரமாக எடுத்துக் கொண்டதாகவும், ரஷ்யா தீவிரமான தாக்குதலில் இறங்கினால் அமெரிக்கா அதற்கேற்ப நடவடிக்கைகளை எடுக்கும் என்பது குறித்து ரஷ்யாவுடன் விவாதித்து வருவதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America says there is no chance of nuclear attacks on ukraine


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->