ஈராக் தாக்குதல்.. இணையத்தில் அமெரிக்க கொடி..! பரபரப்பாகும் பின்னணி தகவல்கள்.!! - Seithipunal
Seithipunal


ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத்தில் அமெரிக்கா நாட்டினுடைய தூதரகம்., அந்நாட்டினை சார்ந்த ஹிஸ்புல்லா பயங்கரவாத ஆதரவாளர்களால் சூரைபடப்பட்டது. இந்த விசயாத்திற்கு ஈரான் நாடு பொறுப்பேற்க வேண்டும் என்று அமெரிக்க அதிபரான டிரம்ப் கடுமையான கண்டனத்தை தெரிவித்தார். 

இதுமட்டுமல்லாது இந்த விசயத்திற்கு ஈரான் மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நேரத்தில் ஈராக் நாட்டில் உள்ள தலைநகர் பாக்தாத்தில் இருக்கும் சர்வேதேச விமான நிலையத்தின் மீது அமெரிக்கா இராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் மேற்கொண்டது. 

இந்த தாக்குதலில் ஈரான் நாட்டின் புரட்சி பாதுகாப்பு படையின் குத்ஸ் படைப்பிரிவு தளபதி காசிம் சோமாலினி மற்றும் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளரின் குழுவுடைய முக்கிய அதிகாரி அபு மகாதி உட்பட 7 பேர் கொலை செய்யப்பட்டனர். 

இந்த தகவலை அமெரிக்க இராணுவ தலைமையகம் பெண்டகன் உறுதி செய்ததை அடுத்து., அமெரிக்க அதிபருடைய உத்தரவின் பேரில் இத்தாக்குதல் அர்நாகேறியிருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

ஈராக் நாட்டில் நடைபெற்ற தாக்குதலுக்கு பின்னர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் அமெரிக்காவின் கொடியினை பதிவு செய்துள்ளார். மேலும்., வேறு எந்த தகவலையும் தெரிவிக்கவும் இல்லை. 

இந்த பதிவு இணையத்தில் பெரும் வைரலாகி வரும் நிலையில்., ஈராக் நாட்டில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளை காசிம் சோமாலினி தாக்குவதற்கு திட்டமிடப்பட்டு இருந்ததாகவும் வெள்ளை மாளிகையின் சார்பாக தெரிவிப்பட்டுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

america president trump upload american flag on twitter after iran attack


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->