இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப்!! இந்தியாவின் முடிவு என்ன?!  - Seithipunal
Seithipunal


இந்தியாவில் தற்போது கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை உறுதி செய்யும் நோக்கில் மலேரியாவிற்கு பயன்படுத்தும் hydroxychloroquine மருந்தை இந்தியா ஏற்றுமதி செய்ய தடை விதித்துள்ளது. ஆனால் அமெரிக்கா கரோனா வைரஸ் பாதித்த அவருக்கு சிகிச்சை அளிப்பதற்கு hydroxychloroquine மருந்து தான் பயன்படுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் அமெரிக்காவுக்கு மருந்துகளை ஏற்றுமதி செய்ய மறுப்பு தெரிவித்துள்ளது இந்தியா. இந்த hydroxychloroquine மருந்தைத் தயாரிப்பதில் இந்தியாவே முதலிடத்தில் உள்ளது. எனவே அமெரிக்காவுக்கு இந்தியா உதவ வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், வைரஸில் இருந்து மீள மோடி உதவுவதாக தெரிவித்து இருந்தார் என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்து கூறிய அதிபர் டிரம்ப் தாங்கள் இந்தியாவுடன் நல்லுறவை பேணி வருகிறோம். இந்தியாவும் அமெரிக்காவை நல்லவிதத்தில் மதித்து வருகிறது என்றும், அமெரிக்காவிற்குமட்டுமாவது இந்தியா மருந்து ஏற்றுமதி செய்ய தடை விதித்ததை நீக்க வேண்டும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா தங்கள் நாட்டுடன் செய்த பொருளாதார ஒப்பந்தங்களை மதிக்க வேண்டும் என்று அதிபர் டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தியா ஏற்றுமதி செய்ய தடை விதித்தால் அதற்கான பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America President Trump request to India for medicine


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->