கொரோனாவில் இருந்து விரைவில் விடுதலை - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதி.! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல நாடுகள் தங்களது மக்களின் உயிர் மற்றும் நாட்டின் பொருளாதாரம் போன்றவற்றை இழந்துள்ளது. உலகத்தின் பல வல்லரசு நாடுகளையும் கொரோனா வைரஸ் விட்டுவைக்காத நிலையில், அமெரிக்கா கொரோனா வைரஸின் தாக்கத்தில் சிக்கி பெரும் சோகத்தையே சந்தித்தது. 

கொரோனா வைரஸ் அதிகஅளவு ஏற்பட்டுள்ள முதல் 5 நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தில் இருக்கிறது. கொரோனா வைரஸை கட்டுக்குள் வைக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தலைமையிலான அரசு மற்றும் தற்போதைய அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசும் அதிரடியாக செயல்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு தடுப்பூசி செலுத்த திட்டம் செயல்படுத்தி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதனால் அமெரிக்காவில் கொரோனா வைரஸின் தாக்கம் வெகுவாக குறைய தொடங்கியுள்ளது. விரைவில் கொரோனாவில் இருந்து அமெரிக்கா விடுதலை அடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விஷயம் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவிக்கையில், " ஜனவரி மாதம் முதல் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்துள்ளது. போர்க்கால நடவடிக்கை காரணமாக 150 நாட்களில் கொரோனவை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

ஒரு டோஸ் தடுப்பூசியை 18.2 கோடி அமெரிக்கர்கள் செலுத்தியுள்ளனர். இவர்களில் 90 விழுக்காடு மூத்தவர்கள், 27 வயதுக்கு மேற்பட்டவர்கள் 70 விழுக்காடு நபர்கள் ஆவார்கள். இவ்வாறு இறுதிக்குள் 16 கோடி பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தி இருப்பார்கள். ஜூலை 4 ஆம் தேதியில் நாம் அமெரிக்க சுதந்திர தினத்தை கொண்டாடினோம். இதன்பிறகு, விரைவில் கொரோனாவின் தாக்கத்தில் இருந்தும் விடுபடுவோம் என்பதையும் தெரிவிக்கிறோம் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AMERICA PRESIDENT JOE BIDEN TALKS ABOUT RELEIF FORM CORONA PANDEMIC 7 JULY 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->