விஷம் தடவப்பட்ட பாய்சன் லெட்டர்.. அதிபர் ட்ரம்பை அதிரவைத்த கடிதம்.! - Seithipunal
Seithipunal


அமெரிக்க அதிபர் ட்ரம்பிக்கு, ரைசின் என்ற விஷம் தடவிய கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த கடிதம் வெள்ளை மாளிகைக்கு செல்லும் முன்னதாகவே, வழக்கமாக மேற்கொள்ளும் சோதனையில் அக்கடிதம் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த விஷயம் குறித்து உளவுத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், கனடாவில் இருந்து இக்கடிதம் பெறப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அமெரிக்காவில் அதிபர் தேர்தல் விரைவில் நடக்கவுள்ளது. 

இந்த தேர்தலை கருத்தில் கொண்டு, ட்ரம்பை கொலை செய்ய இக்கடிதம் அனுப்பப்பட்டதா? என்பது குறித்த விசாரணையும் நடைபெற்று வருகிறது. கடந்த 2014 ஆம் வருடத்திலேயே இது போன்ற கடிதம், அதிபராக பராக் ஒபாமா இருக்கையில் பெறப்பட்டு, குற்றம் இழைத்த நபருக்கு 25 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America President Donald Trump Poison Letter


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->