இந்தியாவிற்கு எச்சரிக்கை கடிதத்தை அனுப்பி காட்டத்தில் பெண்டகன்.! காரணம் என்ன?.!! - Seithipunal
Seithipunal


ரசிய நாட்டில் இருந்து இந்தியாவிற்கு எஸ்-400 இரக ஏவுகணைகள் மற்றும் ஏவுகணைகள் சார்ந்த பாதுகாப்பு உபகரணத்தை வாங்குவதற்கு இந்தியா முடிவு செய்திருந்தது. இந்த முடிவின் படி., இந்தியா - ரசியா ஒப்பந்தம் செய்து எஸ்-400 ரக ஏவுகணையை வாங்க ரூ.40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் போடப்பட்டு., கடந்த வருடத்தின் அக்டொபர் மாதத்தின் போது கையெழுத்திடப்பட்டது. 

இந்த நிலையில்., ரஷிய நாட்டுடன் ஆயுத கொள்முதல் செய்யும் நாடுகளுக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வந்த அமெரிக்கா., பொருளாதார ரீதியாக ரசியாவுடன் ஆயுத கொள்முதலில் ஈடுபடும் நாட்டிற்கு தடை விதிக்கப்படும் என்று தொடர்ந்து மிரட்டி வருகிறது. இந்த மிரட்டலையும் மீறி இந்தியா ஏவுகணைகளை வாங்க உறுதியாக இருந்து வருகிறது. 

Russia - India, Russia, India, Modi,

இந்தியாவின் ஆயுத கொள்முதல் முடிவு குறித்து அமெரிக்க நாட்டின் ராணுவ தலைமையகம் பெண்டகனின் பாதுகாப்பு கொள்கை துணை செயலாளர் டேவிட் டிராச்டன்பெர்க் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி இந்தியாவிற்கு கடுமையான சவாலாக அமைந்துள்ளது. செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது., 

இந்திய நாட்டுடன் கொண்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு பலமாக இருக்கிறது. இந்த பலத்தை மேலும் அதிகரிக்க நாங்கள் விரும்புகிறோம். ரசிய நாட்டிடம் இருந்து எந்த நாடு எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் பட்சத்தில்., அமெரிக்கா அதனை கடுமையாக எதிர்க்கும் என்ற கோட்பாட்டில் உறுதியுடன் இருக்கிறோம். இந்த பிரச்சனை குறித்த தகவலை இந்தியாவிற்கு அனுப்பியுள்ளோம் என்று கூறியுள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

america pentagon gives caution to India when Russia es400 rockets buying


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->