ஏலியன்கள் இருக்கிறதா?.. வெளியான பரபரப்பு காட்சிகள்.. அமெரிக்கா இராணுவ தலைமையகம் தகவல்.!! - Seithipunal
Seithipunal


அமெரிக்க நாட்டின் வான் படை விமானங்கள் பறக்கும் தட்டுகள் தொடர்பான வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டது. இந்த வீடியோ குறித்த முழுமையான வீடியோக்களை அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் வெளியிட்டுள்ளது. 

மேலும், பறக்கும் தட்டுகள் தொடர்பான மூன்று வீடியோக்களை வெளியிட்டுள்ளது. இது கடந்த 2007 மற்றும் 2017 ஆம் வருடத்தில் எடுக்கப்பட்டது என்பதாக முதலில் தெரியவந்துள்ளது. இந்த காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு பறக்கும் தட்டுகள் தொடர்பான பல விஷயங்கள் இணையத்தில் உலா வந்தன. இந்த விஷயம் குறித்து உண்மையான அதிகாரபூர்வ தகவலை தற்போது பெண்டகன் வெளியிட்டுள்ளது.

இந்த மூன்று வீடியோக்களும் 2004 ஆம் வருடம் முதல் 2015 ஆம் வருடத்தின் வரை அமெரிக்க ராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்ட சமயத்தில் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த மூன்று வீடியோக்களின் தொகுப்பையும் நியூயார்க் டைம்ஸ் 2017 இல் வெளியிட்ட நிலையில், மற்ற வீடியோவை அங்கு உள்ள ஸ்டார்ஸ் அகடமி வெளியிட்டுள்ளது. இந்த மூன்று வீடியோக்கள் தொடர்பான பல்வேறு கேள்விகள் எழுந்து வந்த நிலையில், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. 

மேலும், பறக்கும் தட்டுகள் என்று கூறப்படும் விண்கலத்தை அடையாளம் காணப்படாத பொருள் என்று அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. அதாவது ஆங்கிலத்தில் அண்டிபைடு பிளையிங் ஆப்ஜெக்ட் (Unidentified Flying Object) என்று அழைப்பார்கள். இது குறித்து பேசிய பெண்டகனின் செய்தி தொடர்பாளர் ,பரபரப்பான காட்சிகள் உண்மையானதா? அல்லது இருக்கிறதா? இல்லையா? என்பது குறித்த முழு வீடியோவானது இல்லை. இது தொடர்பான பல கேள்விகள் எழுந்து வந்தது, மக்களின் சந்தேகத்தை தீர்க்கும் வகையில் தற்போது இந்த வீடியோக்களை வெளியிட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America Pentagon explain about 3 alien video trending in social media


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->