வங்கிக்கணக்கில் தவறுதலாக வந்த 85 இலட்சத்தை செலவழித்த கணவன் - மனைவி.! அடுத்தடுத்து ஆப்பு செதுக்கியதால் கதறிய தம்பதி..!! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் வங்கிக்கணக்கில் தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்டிருந்த 85 லட்சம் ரூபாயை மொத்தமாக செலவு செய்தததால் தம்பதி வழக்கை சந்தித்து வருகிறார்கள்.

பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள மாண்டோர்ஸ்வில்லி என்னும் இடத்தில் சேர்ந்தவர்கள் ராபர்ட் வில்லியம்ஸ் மற்றும் டிஃப்பனி வில்லியம்ஸ் தம்பதி.

இவர்கள் வங்கிக்கணக்கில் தவறுதலாக இந்திய மதிப்பில் 85 லட்ச ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. ஆனால் சட்டப்படி இதை வங்கிக்கு தெரிவிக்காத தம்பதி கேம்பர், சேவி போன்ற விலை உயர்ந்த ரேஸ் கார்கள் வாங்குவது என்றும், நண்பர்களுக்கு உதவியது என்றும் டெபாசிட் ஆன பணத்தின் பெருமளவை தாராளமாக செலவு செய்துள்ளார்கள். 

வணிகத்துக்காக பிபி அண்ட் டி வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட பணம், எதிர்பாராத பிழையின் காரணமாக தம்பதியின் வங்கிக்கணக்கில் சேர்ந்ததாக கூறுகிறார்கள்.
அதன் பின் சரியான வங்கிக்கணக்கு பணத்தை அனுப்பிய வங்கி மேற்கொண்டு நடத்திய விசாரணையில், ராபர்ட் மற்றும் டிஃப்பனி வங்கிக்கணக்கில் பணம் தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்டதும் அவர்கள் இரண்டரை வாரத்தில் 71 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துவிட்டது தெரியவந்தது. 

முதலில் பணத்தை திருப்பி தருவதாக கூறிய தம்பதி பின்னர் தகவல் தொடர்பை துண்டித்துக் கொண்டதாக வங்கி தரப்பில் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அவர்கள் மீது திருட்டு, திருடிய பொருளை வைத்திருத்தல் உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜரான ராபர்ட் மற்றும் டிஃப்பனி தலா 18 லட்சம் ரூபாய் செலுத்தி ஜாமின் வாங்கியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

america pair spend 85 lakhs within 2 weeks


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->