மகனின் அன்பு ஆசையை நிறைவேற்றி அடுத்த கணமே உயிரை விட்ட தாய்.! - Seithipunal
Seithipunal


இந்தியானாவின் சாண்டா கிளாஸில் (Santa Claus) உள்ள ஹாலிடே வேர்ல்ட் & ஸ்பிளாஷின் சஃபாரி தீம் (Plashin Safari Theme Park) பூங்காவிற்கு தனது 17 வயது மகனுடன் வருகை தந்திருந்த 47 வயது பெண்மணி தமனியில் இரத்தக்கசிவு ஏற்பட்டு பலியான சோகம் அரங்கேறியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள ஓஹியோ (Ohio) மாகாணத்தை சார்ந்த பெண்மணி டான் ஜான்கோவிக் (Dawn Jankovic) வயது 47. இவர் அங்குள்ள இண்டியானா (Indiana) மாகாணத்தில் இருக்கும் சாண்டா கிளாஸ் ஹாலிடே வேர்ல்ட் & ஸ்பிளாஷின் சஃபாரி தீம் பார்க்குக்கு தனது 17 வயது மகன் குன்னர் மேர்க்கருடன் (Gunnar Merker) வருகை தந்துள்ளார். 

டான் ஜான்கோவிக்கு ரோலர் கோஸ்டாரில் செல்ல மிகுந்த ஆர்வமாக இருந்தாலும், சம்பவ தினத்தன்று ஏனோ பயமாக இருந்துள்ளது. அவரது 17 வயது மகனின் வற்புறுத்தல் காரணமாக ரோலர் கோஸ்டாரில் செல்ல சம்மதம் தெரிவித்து பயணம் செய்துள்ளார். அவர் ரோலர் கோஸ்டர் பயணத்தின் போதே பயத்தில் அவரின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

ரோலர் கோஸ்டாரின் இறுதி இடத்திற்கு வந்த அவர் கீழே இறங்கியதும் மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்ட குடும்பத்தினர் உடனடியாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்யவே, அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும், அவர் உள் இரத்தப்போக்கு, தமனி கிழிதல் போன்ற காரணத்தால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக குடும்பத்தினர் தெரிவிக்கையில், டான் ஜான்கோவிக் எப்போதும் ரோலர் கோஸ்டாரில் செல்ல ஆர்வமாக இருப்பார். இன்று ஏனோ மறுப்பு தெரிவித்தார். அவரது மகன் வற்புறுத்தி அவரை ரோலர் கோஸ்டர் பயணத்திற்கு அழைத்து சென்ற நிலையில், அதுவே அவரின் இறுதி பயணமாகியுள்ளது என்று தெரிவித்தனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America Ohio Indiana Santa Claus Theme Park Mom Dawn Jankovic Died After Roller Coaster with Son


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->