அமெரிக்கா || சக்கரத்தில் மறைத்து வைத்து போதை பொருள் கடத்திய பெண் கைது.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் நியூயார்க் நகரில் ஜான் எப் கென்னடி சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்திற்கு பல்வேறு பகுதியில் இருந்து விமானங்கள் வந்து செல்கின்றன.

அந்த வகையில், இந்த விமான நிலையத்திற்கு பன்டா கேனா பகுதியில் இருந்து விமானம் ஒன்று வந்திறங்கியது. அதிலிருந்து, எமெலிண்டா பவுலினோ டி ரிவாஸ் என்ற பெண் ஒருவர், சக்கர நாற்காலி ஒன்றின் உதவியுடன் இறங்கி சென்றுள்ளார். 

ஆனால், அவரது சக்கர நாற்காலியில் உள்ள சக்கரங்கள் அனைத்தும் சூழலாமல் இருந்துள்ளன. இதனை விமான நிலையத்தில் உள்ள அமெரிக்க சுங்க துறை கவனித்து பின்னர், அந்த சக்கர நாற்காலியை எக்ஸ்ரே பரிசோதனை செய்வதற்கு முடிவு செய்துள்ளனர். 

அதன் படி, சக்கர நாற்காலியை பரிசோதனை செய்ததில், நான்கு சக்கரங்களிலும் வெள்ளை நிற போதை பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது. இந்நிலையில், அந்த பெண் மொத்தம் 28 பவுண்டு எடையுள்ள கொக்கைன் என்ற போதை பொருளை கடத்தி சென்றுள்ளார். 

இவற்றின் மதிப்பு ரூ.3.6 கோடி என்று தெரிவிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து, அவரை கைது செய்த போலீசார் உள்நாட்டு பாதுகாப்பு விசாரணைக்காக  அழைத்து சென்றுள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

america newyark airport woman arrested for drugs kidnape


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->