நல்லடக்கம் செய்யப்பட்ட நான்காவது நாளில் உயிர்பிழைத்து வந்த முதியவர்.. பேரதிர்ச்சியில் மனைவி, குடும்பத்தினர்.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் உள்ள ஹோண்டுராஸ் எல்.கார்மென் பகுதியை சார்ந்த தம்பதி ஜூலியோ (வயது 65) - விக்டோரியா. கடந்த 25 ஆம் தேதி வீட்டில் இருந்து வழக்கமான நடைப்பயணத்திற்கு சென்ற ஜூலியோ மயங்கி விழவே, ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவர் மயங்கி விழுந்தது தொடர்பாக யாருக்கும் தெரியவில்லை. 

நீண்ட நேரம் ஆகியும் கணவர் வீட்டிற்கு வராததால் அதிர்ச்சியடைந்த மனைவி விக்டோரியா, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 30 ஆம் தேதி அங்குள்ள மருத்துவமனையில் இருந்து விக்டோரியாவிற்கு அழைப்பு வரவே, கொரோனா தாக்குதலால் முதியவர் உயிரிழந்துள்ளார் என்றும், அவர் உங்களின் கணவராக இருக்கலாம் என சந்தேகம் தெரிவிப்பதாகவும், அடையாளம் காண்பிக்க மருத்துவமனைக்கு வருமாறும் கூறப்பட்டுள்ளது. 

இதனால் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகிய மனைவி, கணவரின் மருத்துவ பரிசோதனை அறிக்கையை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்று பார்க்கையில், கணவரின் சடலம் என்று அடையாளம் காணப்பட்டு, இறுதி சடங்கிற்காக வீட்டிற்கு சடலத்தை பெற்று சென்றுள்ளார். இந்த தருணத்தில், விக்டோரியாவின் மகன் இது நமது தந்தையாக இருக்காது என்று சந்தேகம் எழுப்பியுள்ளார். 

இதனை யாரும் கண்டுகொள்ளாத நிலையில், ஜூலியோவின் சடலம் என்று கூறப்பட்ட பிரேதம் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மயங்கி விழுந்த ஜூலியோவை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், சிகிச்சைக்கு பின்னர் சுய நினைவு பெற்று தனது இல்லத்தின் முகவரியை தெரிவித்துள்ளார். 

கணவர் என்று கொடுக்கப்பட்ட சடலத்தை அடக்கம் செய்த நான்காவது நாளில் கணவர் உயிருடன் அவசர ஊர்தியில் இருந்து இறங்கவே, விக்டோரியாவிற்கு பெரும் அதிர்ச்சியே ஏற்பட்டுள்ளது. இதன்பின்னர் விசாரித்த போது உண்மை நிலவரம் தெரியவந்து, மாற்று பிரேதத்தை மருத்துவமனை நிர்வாகம் ஜூலியோ என்று கூறி ஒப்படைத்தது தெரியவந்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America man body Changed and Disposed by Another Family


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->