அதிகரித்த துப்பாக்கி கலாச்சாரம்.. 3 வயது குழந்தை துடிதுடித்து பலியான பரிதாபம்.!! - Seithipunal
Seithipunal


அமெரிக்க நாட்டில் கடந்த சில வருடங்களாகவே துப்பாக்கி கலாச்சாரமானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் துப்பாக்கி விநியோகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்று அரசை சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில், இப்போதைய ட்ரம்ப் தலைமையிலான அரசு அலட்சியம் காண்பித்து வரும் நிலையில், அடுத்தடுத்து துப்பாக்கி சூடு சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அங்குள்ள லூசியானா மாகாணத்தின் பேடன் ரூஜ் நகர் பகுதியில் கார் ஒன்று சென்று கொண்டு இருந்தது. 

இந்த காரின் மீது மற்றொரு வாகனத்தில் வந்த கும்பலொன்று சரமாரியாக சுட்ட நிலையில், காரில் இருந்த இப்பிரி காம்பஸ் என்ற 3 வயது பச்சிளம் குழந்தை துப்பாக்கி குண்டு துளைத்து பரிதாபமாக பலியானது. காரில் இருந்த ஓட்டுநர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். 

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், துப்பாக்கி சூடு எதற்காக நடத்தப்பட்டது என்பது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America Lusitania 3 Year baby died Gun Fires


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->