அமெரிக்காவையே அலற வைத்த மதபோதகர்.. தனிநாடு வாங்கி, 918 கொலை, தற்கொலை..! பரபரப்பு வரலாறு.! நித்தியின் கதி என்ன?..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவையே அதிர வைத்த பிரபல சாமியாராக இருக்கும் நித்தியானந்தா, தமிழக இளைஞர்கள் மத்தியில் நகைசுவை நாயகனாகவும் இருந்துவருகிறார். தற்போது தனக்கென ஒரு தனி நாட்டை உருவாக்கி, அங்கு தனது சிஷ்யர்களுடன் வாழ்ந்து வரும் நித்தியானந்தா, கைலாசா நாட்டிற்கு என தனி நாணயங்களையும் வெளிவிட்டு இந்திய மக்களை அதிர வைத்தார். இந்திய அரசு நித்யானந்தாவை பிடிக்க ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ள நிலையில், அவரது செயல்பாடுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

நித்யானந்தாவை போலவே வரலாற்றின் பக்கங்களில் கிறிஸ்துவ பாதிரியார் இருந்துள்ளார் என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. ஜேம்ஸ் வாரன் ஜோன்ஸ் (James Warren Jones) என்ற பெயரைக் கொண்ட ஜிம் ஜோன்ஸ் (Jim Jones), கடந்த 1931 ஆம் வருடத்தின் மே மாதம் 13 ஆம் தேதி அமெரிக்காவில் இருக்கும் இண்டியானா மாகாணத்தில் கிரீட் கிராமத்தில் பிறந்துள்ளார். இவனது தந்தை முதலாம் உலகப் போரில் பங்கேற்று கால்களை இழந்த நிலையில், ஜேம்ஸக்கு 14 வயது இருக்கையில் அவரது தந்தையும், தாயும் பிரிந்து சென்றுள்ளனர். 

இதனால் அம்மாவுடன் வசித்து வந்த சிறுவன் ஜோன்ஸ், தனிமையிலேயே தனது பொழுதை கழித்து வந்துள்ளான். ஜோன்ஸுக்கு என அதிகளவில் நண்பர்களும் கிடையாது. கல்லூரி காலத்தில் கம்யூனிச கொள்கையின் மீது பிடிப்பு ஏற்பட்டுள்ளது. சிறுவயது முதலாகவே தேவாலயத்தில் பணிபுரிந்த அனுபவம் இருந்ததால், அதனை செய்ய ஆரம்பித்த ஜோன்ஸ், மக்களால் நிராகரிக்கப்பட்ட அமெரிக்க கருப்பின மக்களை குறி வைத்து தன் பிரச்சாரத்தை முன்னெடுத்து இருக்கிறான். 

இன பாகுபாடு, விரக்தி, தீராத உடல் நோய் பிரச்சனை, வாழ்க்கையில் துயரம் என்றால் என்னுடன் வாருங்கள் என்றும், அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கிறேன் என்றும் பிரச்சாரம் செய்துள்ளான். அந்த நேரத்தில், ஜோன்ஸை நாடிவந்த பலருக்கும் பிரச்சினைகள் தீர்ந்த நிலையில், அவரை தேடி அதிகளவு மக்கள் வரத்தொடங்கினர். இதனையடுத்து, கடந்த 1955 ஆம் வருடத்தில் தனக்கென ஒரு புது தேவாலயத்தை உருவாக்கி, அதற்கு மக்களின் தேவாலயம் என்றும் பெயர் சூட்டப்பட்டது. 

உள்ளூர் நாளிதழ்கள் மற்றும் கருப்பின மக்கள், அரசியல்வாதிகளால் பெரும் செல்வாக்கான சக்தியாக அந்த தேவாலயம் உருமாற, ஜோன்ஸை ஆப்பிரிக்க கருப்பின மக்கள் கடவுளாகவும், கடவுளின் தூதராகவும் பார்க்க தொடங்கினர். நித்தியானந்தா போலவே பல மடங்கு சிஷ்யர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே சென்ற நிலையில், கால் பதித்த இடம் பணத்தை கொட்டி வந்துள்ளனர். பின்னர் கடந்த 1973 ஆம் வருடம் பிரச்சினை தலைதூக்க துவங்கியுள்ளது. 

தேவாலயங்களில் சட்டவிரோத சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், போதைப் பொருள் பயன்பாடு, பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான பிரச்சினை இருந்தது. இதனையடுத்து, கடந்த 1979 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி ஜோன்ஸ் கைது செய்யப்பட்ட நிலையில், ஜிம் தென் அமெரிக்க நாடான கயானாவில் தனி சாம்ராஜ்யத்தை நிறுவ முடிவு செய்துள்ளார். இதனையடுத்து, தனது சீடர்களிடம் சொர்க்கத்தை போல, நமக்கென்று தனி நாட்டை கடவுள் கொடுக்கப் போகிறார் என்றும் தெரிவித்துள்ளார். 

கயானா அரசிடம் 3242 பரப்பளவு நிலத்தை வாங்கி புதிய நகரத்தை உருவாக்கிய ஜோன்ஸ், ஜோன்ஸ் டவுன் (Jonestown) என்றும் பெயர் சூட்டியுள்ளான். இதன்பின்னர், சிஷ்யர்களை அழைத்து சென்று குடியேற தொடங்கிய நிலையில், தன்னை தானே கடவுள் என்று பாவித்துக் கொண்ட ஜோன்ஸ், ஆண் மற்றும் பெண்களிடம் பாலியல் ரீதியான விளையாட்டில் ஈடுபட்டு வந்துள்ளான். பாவங்களிலிருந்து விடுபட கடவுளை அடையும் பரிசுத்தமான வழி என்றும் பாலியல் தொல்லைக்கு முட்டுக்கொடுத்துள்ளான். 

அவனது சொல்பேச்சு கேட்டு நடக்கத்தவர்களை கடுமையாக தாக்கியும், அடம்பிடிக்கும் குழந்தைகளை ட்ரம்மில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியும் வந்துள்ளான். துப்பாக்கி ஏந்திய காவலர்கள் எப்போதும் கண்காணித்துக் கொண்டே இருக்க, ஒவ்வொரு நாளும் மக்கள் கடுமையாக வேலை வாங்கப்பட்டுள்ளனர். ஜோன்ஸ் டவுன் தொடர்பான விவகாரங்கள் அடுத்தடுத்து பெரும் சர்ச்சையாக மாறவே, ஜோன்ஸின் சிட்டியில் குடியேறியவர்களின் உறவினர்கள், அமெரிக்க அரசிடம் புகார் அளித்தனர். 

இதனையடுத்து, அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் தலைமையிலான குழுவினர் கடந்த 1978 ஆம் வருடம் ஜோன்ஸ் சிட்டிக்கு வந்த நிலையில், அவர்களை ஒருநாள் இருக்க வைத்து மறுநாள் சுட்டுக்கொலை செய்துள்ளான். மேலும், அமெரிக்காவை பகைத்தால் என்னநடக்கும் என்பதை அறிந்துகொண்ட ஜோன்ஸ், மக்கள் அனைவரையும் ஒரு இடத்திற்கு கூட்டி வந்து " என்னோடு உயிரை விடத் தயாராக இருங்கள்.. இது கடவுளின் கட்டளை " என்று பேசி சயனைடை குடிக்க வைத்துள்ளான். 

உயிரிழக்க விரும்பாத நபர்களை துப்பாக்கி முனையிலும் சயனைடு குடிக்க வைத்துள்ளான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வரிசையாக நின்று செய்து சயனைடு குடித்த நிலையில், அமெரிக்க காங்கிரஸ் குழுவினர் சுட்டு கொல்லப்பட்ட செய்தியை அறிந்ததும் அமெரிக்க இராணுவம் கயானாவிற்கு விரிந்துள்ளது. அவர்கள் ஜோன்ஸ் சிட்டிக்கு வருகையில் மொத்தமாக 918 பேர் பிணங்கள் வீதியில் குவிந்துகிடப்பதை கண்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். மேலும், ஜோன்ஸும் தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளான். 

அமெரிக்காவில் நடைபெற்ற மிகக்கொடூரமான சம்பவத்தில், ஜோன்ஸ் சிட்டி தொடர்பான விவகாரம் அவர்களால் மறக்க இயலாதது. அதனைப்போன்று, இன்று கடவுளாக மற்றும் கடவுளின் தூதுவனாக தன்னை பாவித்துள்ள நித்யானந்தாவும், இருபாலர் பாலியல் குற்றசாட்டு, கொலை, கடத்தல் என்று பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள நிலையில், அவரின் இறுதிக்கட்ட வாழ்க்கை எப்படி இருக்கப்போகிறது? இல்லை மீனாட்சியின் அருளால் நல்வழி பிறக்குமா? என்பது காலத்தின் பதிலாக மட்டுமே நமக்கு இருக்கும். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America Jones Town Mystery Revoked by Nithyananda Private Country


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->