அமெரிக்கா - இந்தியா...! கையெழுத்தாகப்போகும் ஐந்து ஒப்பந்தங்கள் என்ன?..!! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா நாட்டின் அதிபர் வரும் 24 ஆம் தேதியன்று அகமதாபாத்திற்கு வருகைதரவுள்ளார். இங்கிருந்து ஆக்ராவிற்கும், டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு பின்னர், 25 ஆம் தேதியின் போது இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றவுள்ளது. 

டிரம்ப் - மோடி பேச்சுவார்த்தையின் போது முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு இருக்கிறது. மேலும், இது தொடர்பாக பேசிய ட்ரம்ப் இந்தியாவுடன் மிகப்பெரிய ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார். 

இந்த சமயத்தில், 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என்றும், இது தொடர்பான பேச்சுவார்த்தையை அமெரிக்காவின் வர்த்தக குழுவிடம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த விஷயம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் அறிவுசார் சொத்துரிமை, வர்த்தகம், உள்நாட்டு பாதுகாப்பு போன்ற முக்கிய 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும், விசா கட்டுப்பாடு தளர்த்துதல், தீவிரவாத எதிர்ப்பு போன்ற பிரச்சனையும் விவாதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

america India external affair engagement during modi trump meeting


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->