அமெரிக்காவில் பலத்த பாதுகாப்புடன் இயங்கி வந்த சீன உளவுத்துறை.. பரபரப்பாக்கும் தகவல்கள்.!! - Seithipunal
Seithipunal


அமெரிக்க நாட்டின் அறிவுசார் வளங்களை திருடுவதாகவும், அமெரிக்காவை தொடர்ந்து உளவு பார்த்து வருவதாகவும் சீனாவின் மீது அமெரிக்க பகிரங்க குற்றம் சுமத்தியுள்ளது. மேலும், கொரோனா விவகாரம், தென்சீன கடல் விவகாரம், பொருளாதார தடை தொடர்பான பிரச்சனையில் அமெரிக்கா - சீனா இடையிலான உறவுகள் தொடர்ந்து வலுவிழந்து வருகிறது. 

சீனா தனது ஹஸ்டன் தூதரகத்தை மூட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறிய நிலையில், அமெரிக்காவிற்கு பதிலடி கொடுபடகுக சீனாவில் உள்ள செங்கிடூ அமெரிக்க தூதரகத்தை அமெரிக்கா மூட வேண்டும் என்று சீனா அறிவித்தது.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவின் பேரில், சீன தூதரகத்தை உடைத்து உள்ளே நுழைந்த அதிகாரிகள் தீவிர ஆய்வு செய்தனர். அமெரிக்க அதிபரின் உத்தரவால் ஹஸ்டன் தூதரகம் மூடப்பட்டது.

அமெரிக்க ஜனாதிபதி உத்தரவின்பேரில் சீன தூதரக கதவை உடைத்து அமெரிக்கா போலீசார் உள்ளே புகுந்து  ஆய்வு மேற்கொண்டுள்ளனர். மேலும், சீன தூதரக அதிகாரிகள் அவசர அவசரமாக அங்குள்ள சில பொருட்களை கொளுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தீயை அணைக்க தீயணைப்பு படையினர் விரைந்தும், சீன அதிகாரிகள் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஹஸ்டனில் இருந்த சீன தூதரகம் மருத்துவ ஆராய்ச்சியை திருடுதல், எண்ணெய் மற்றும் எரிவாயு தொழில்துறை தகவலையும் சேகரித்துள்ளதாக தெரியவருகிறது. இந்த தூதரகம் அமெரிக்காவில் இருந்தாலும் பலத்த பாதுகாப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. பல தகவலை திருடும் உளவு அமைப்பாகவும் செயல்பட்டு வந்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America Houston China Embassy issue


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->