வரலாற்றில் இல்லாத வெயிலின் தாக்கத்தால், பெரும் நீர் சரிவை சந்தித்த அமெரிக்காவின் ஹூவர் டேம்..! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாணம் நெவேடாவின் (Naveda) பவுல்டர் நகரம் (Boulder City) அருகே உலகப் பிரசித்தி பெற்ற ஹூவர் அணை (Hoover Dam) உள்ளது. பாலைவன பகுதியான அரிசோனா மாகாணத்தில் ஓடிய கலரோடா நதியின் (Colorado River) குறுக்கே, கடந்த 1931 ஆம் வருடம் கட்டப்பட்ட ஹூவர் அணையின் முதல் பெயர் Boulder Dam ஆகும். 1936 ஆம் வருடம் இது திறக்கப்பட்டது. கடந்த 1947 ஆம் வருடத்தில் Boulder Dam க்கு ஹூவர் அணை என பெயரிடப்பட்டது.

சுமார் 25 மில்லியன் மக்களுக்கு நீர் விநியோகம் செய்து வந்த ஹூவர் அணை வரலாற்றில் இல்லாத அளவு நீர் சரிவை சந்தித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இரண்டு பள்ளத்தாக்குகளை இணைத்து மிகப்பெரிய அளவில் 5 வருடத்தில் ஆயிரக்கணக்கான தொழிலார்களின் தொடர் உழைப்பின் மூலமாக ஹூவர் அணை கட்டப்பட்டது. ஹூவர் அணை கட்டப்பட்ட பின்னர், அங்குள்ள பல மாகாணங்கள் நீர் பிரச்சனையில் இருந்து விலக்கம் பெற்றது. 

இந்த ஹூவர் அணையின் உயரம் 726.4 அடி (221.4 மீட்டர்) ஆகும். நீளம் 1,244 அடி (379 மீட்டர்) ஆகும். இந்த அணையினால் நெவாடா, அரிசோனா மற்றும் கலிபோர்னியா மாகாண மக்கள் பலன் பெறுகிறார்கள். அமெரிக்காவின் பல மாகாணங்களை கடந்த சில மாதமாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், இதன் எதிரொலியாக ஹூவர் அணையின் நீர்மட்டம் மளமளவென சரிந்துள்ளது. 

கிட்டத்தட்ட 140 அடி நீர் அங்கிருந்து வெப்பத்தால் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நமது தமிழகத்தில் உள்ள மேட்டூர் அணையின் உயரம் 120 அடி (37 மீட்டர்) ஆகும். கற்பனை செய்து கொள்ளுங்கள், கிட்டத்தட்ட மேட்டூர் அணையை கீழே இருந்து மேலே பார்க்கும் உயரம் அளவிலான நீர் வெப்பத்தால் குறைந்துள்ளது. இதனால் நீரினால் செழிப்படைந்து இருந்த Hoover அணையின் பல பகுதிகள் வறண்டு வெடிப்புடன் காணப்படுகிறது. 

அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவியின் சிலை 140 அடியில் உள்ளது. அந்த அளவிலான நீர் குறைந்துள்ளது. Hoover அணையின் நீரினால் மூடப்பட்டிருந்த சிறு சிறு மலைகளில் மேல் முகடுகள் மட்டுமே முதலில் தென்பட்ட நிலையில், 140 அடி நீர் குறைந்ததால் பல சிறு மலைகள் தனது பெருமளவு தோற்றத்தை வெளிப்படத் தொடங்கியுள்ளது.

பல ஹாலிவுட் படங்களில் ஹூவர் அணையை காண்பித்து இருப்பார்கள். பிரபல நடிகர் மற்றும் WWE போட்டியாளர் ராக்கின் San Andreas திரைப்படத்தில் நிலநடுக்கத்தால் இந்த அணை இடிந்து தரைமட்டாவது போன்ற காட்சிகளும் இடம்பெற்று இருக்கும்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America Hoover Dam Water Loss due to Historical Weather Sun Heat 24 June 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->