'கல்வி பாதிக்கக்கூடாது.' இலங்கை பள்ளி மாணவர்களுக்கு, உணவுப் பொருட்களை கொடுத்த அமெரிக்கா.! - Seithipunal
Seithipunal


இலங்கையில் நிலவும் பொருளாதார அசாதாரண நிலையால், பொதுமக்கள் அன்றாட தேவைக்கான பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அத்துடன் இறக்குமதி செய்யப்படுகின்ற பொருட்களை கூட நீண்ட வரிசையில் நாள்கணக்கில் நின்று வாங்கும் நிலை இருக்கிறது. 

இந்த பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் உதவி செய்து வருகின்றன. முன்னதாக இலங்கையின் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே பதவியிலிருந்து விலகிய நிலையில் அடுத்ததாக ரனில் விக்ரமசிங்கே அதிபராக பொறுப்பேற்றுள்ளார். ஆனாலும், இலங்கையின் அசாதாரண சூழலில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை.

இந்த நிலையில், அமெரிக்கா பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கின்ற இலங்கை பள்ளி சிறுவர், சிறுமியர்களுக்கு 3000 டன் உணவு பொருட்களை கொடுத்துள்ளது. குழந்தைகளின் கல்வி, பசியால் எந்த விதத்திலும் பாதிக்க கூடாது என்று எண்ணிய அமெரிக்க மக்களின் நன்கொடையால் இந்த உணவு பொருட்களை இலங்கைக்கு அமெரிக்க நாடு கொடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America help to sri Lanka school students


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->