சத்தமே இல்லாமல் பாகிஸ்தானிற்கு பலே உதவி செய்த அமெரிக்கா.!! - Seithipunal
Seithipunal


கரோனா வைரஸின் தாக்கமானது உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கரோனா வைரஸிற்கு 7476 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 143 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், மருத்துவ ரீதியிலான உதவிகளை பாகிஸ்தான் எதிர்பார்த்தது.

பாகிஸ்தானிற்கு உதவி செய்யும் வகையில் அமெரிக்கா 8.4 மில்லியன் டாலர்களை அமெரிக்கா வழங்கியுள்ளது. இந்த செய்தியை உறுதி செய்த பாகிஸ்தான் அமெரிக்க தூதர் ஜோன்ஸ் வெளியிட்ட வீடியோ காட்சியில் இது குறித்த தகவலை தெரிவித்து இருந்தார். 

மேலும், அமெரிக்கா 8 மில்லியன் டாலருக்கும் அதிகமான புதிய பங்களிப்புடன், பாகிஸ்தான் முழுவதும் கரோனாவை தடுக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலமாக பாதிக்கப்பட்ட மக்களை கவனித்துக்கொள்ள இயலும். பாகிஸ்தானுடன், அமெரிக்கா இணைந்து செயலாற்றுகிறது. 

பாகிஸ்தான் மக்களின் தேவைக்காக இந்த பணம் உபயோகம் செய்யப்படுகிறது. அதிகளவு சோதனை கூடங்கள் அமைக்கப்படவுள்ளது. பாகிஸ்தானில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கரோனாவை கட்டுக்குள் வைக்கவும், சோதனை செய்யும் வகையில் கண்காணிப்பு திறனை அதிகரிக்கவும் இது உதவி செய்யும். 

கரோனா வைரஸின் தாக்கம் பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகளாவிய பாதிப்புடன் பாகிஸ்தானும் தொடர்ந்து வருகிறது. சர்வதேச நாணய நித்யம் கடந்த வியாழக்கிழமையில் 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் அவசர நிதிஉதவி செய்தது குறிப்பிடத்தக்கது என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

america gives 8 million american dollar for Pakistan to corona virus relief fund


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->